International02 September 2026

சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

நேபாளத்தில் வெள்ளம் காரணமாக சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக படையினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 119 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்னும் பல நீர்மின் நிலையங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அடையஇ கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணிகளின்போது நீர்மின்சார நிலையங்களில் உயிர்ப்பிழைத்தவர்கள் இருக்கலாம் என்றும் அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட இந்த அழிவுக்கரமான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டிவிட்டதுடன்இ சுமார் 4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes