General02 September 2026

பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டித்தால் கடும் நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தண்டிப்பது அல்லது அவர்களை உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes