தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தலவாக்கலை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதோடு, கொழும்பில் தேநீர் கடைகளில் தேநீர் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையோ மாற்றுச் செயல்களையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
தமக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டே தாம் செயற்படுவதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குச் செய்ய வேண்டிய எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் வீடுகளை மாத்திரம் நிர்மாணித்துவிட்டு ஏமாற்றி வருவதாகவும், அவர்களிடம் சமூக வலைத்தளங்கள் பலமாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிகாட்டியுள்ளார்.
Latest News
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!
Local
07 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!
Local
07 September 2026
சிறையிலிருந்து நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரும் நாமல் - சபாநாயகருக்கு கடிதம்!
Local
07 September 2026
தெஹிவளையில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
Local
07 September 2026
அரச சுரங்கங்களை பிடியில் வைத்துள்ள விஜய்யின் நண்பர்கள் : பகிரங்க குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின்!
Local
07 September 2026
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் நாளை வரை விளக்கமறியலில்
Local
07 September 2026
ஆதாரங்களில் ஸ்டாலின், உதயநிதி பெயர்கள் - திமுகவை கதறவிட்ட முதலமைச்சர் விஜய்!
Local
07 September 2026
போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு: வெளியான முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
நிம்மதி பெருமூச்சு! செப்டம்பர் தொடக்கத்தில் குறைந்த டெங்கு பாதிப்பு!
Local
07 September 2026
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறுவதற்கு அனுமதி
Local
07 September 2026