தமிழகத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026