Entertainment15 July 2026

மீண்டும் வருகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ’: களமிறங்கும் புதிய கதாநாயகன்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.

கிராமத்து பின்னணியில் நகைச்சுவை அம்சங்களுடன் உருவான இந்த திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' திரைப்படம் உருவாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' தொடர்பாக படக்குழுவினரிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes