மும்பை மெட்ரோவின் குண்டாவலி (Gundavali) தொடருந்து நிலையத்திற்கு தினமும் ஒரு செம்மஞ்சல் நிறப் பூனை வழக்கமாக வந்து செல்வதை பயணிகள் கவனித்து வருகின்றனர்.
அங்கிருக்கும் தளங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் ஓய்வெடுக்கும் இந்தப் பூனை, பயணிகள் மற்றும் மெட்ரோ ஊழியர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் சந்தேஷ் (Sandesh) என்ற மெட்ரோ பயணி ஒருவர், இந்த பூனைக்கு மெட்ரோ நிர்வாகம் ஏதாவது ஒரு கௌரவப் பொறுப்பை வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மும்பை மெட்ரோ (MMOPL) நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், அந்த பூனைக்கு ‘தலைமைப் பூனை அதிகாரி’ (Chief Cat Officer - CCO) என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதாக நகைச்சுவையாகவும் நெகிழ்ச்சியாகவும் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "தொடருந்து நிலையத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் மேற்பார்வையிடும் சிறப்பு அதிகாரி" எனப் பயணிகள் இந்த புதிய 'அதிகாரியை' செல்லமாக அழைத்து மகிழ்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Local
07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026
"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்
Local
06 September 2026
புதிய பச்சை நிற இலக்கத் தகடு: அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்
Local
06 September 2026
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி
Local
06 September 2026
வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர: சிஐடி தகவல்
Local
06 September 2026
மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்
Local
06 September 2026
Lanka Chairman's Business Excellence Awards 2026: 'ஹிரு' ஊடகக் குழுமம் பல விருதுகளை வென்று சாதனை!
Local
06 September 2026
துலீப் கிண்ணம் 2026 இறுதிப்போட்டி: முதல் நாளில் East Zone அணி வலுவான தொடக்கம்!
Local
06 September 2026