இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான நீண்டகால சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், அவருக்கு 164,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 5.5 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் (SLC) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டதனை அடுத்து, சுவிட்சர்லாந்திலுள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை மீளப் பெற ஹதுருசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஹதுருசிங்க 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னேறாத நிலையில், அவர் சுமார் 450,000 அமெரிக்க டொலர்களைக் கோரி புதிய சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்தார்.
இதனையடுத்து எட்டப்பட்ட சமரச உடன்பாட்டின்படி, அவரது வரிப் பொறுப்பில் 50 சதவீதப் பங்கையும் உள்ளடக்கி மொத்தம் 200,000 அமெரிக்க டொலர்களைப் பெற உடன்பாடு எட்டப்பட்டது.
இதில் 164,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் செலுத்தி வழக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்ட ஹதுருசிங்கவின் காலத்தில், இலங்கை அணி விளையாடிய 67 சர்வதேச போட்டிகளில் 24 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.
அத்துடன், அவரது பதவிக் காலத்தில் ஒழுக்கமின்மை சார்ந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. தனிநபர் விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில், அணிக்குள் சீர்குலைவை ஏற்படுத்தியமை மற்றும் வீரர்களைப் போதியளவு தயார்படுத்தத் தவறியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவராக காணப்பட்டார்.
இந்தப் பிரச்சினை காரணமாக அதிகளவிலான சட்டச் செலவுகள் ஏற்பட்ட நிலையில், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவும் (கோப்) இதில் தலையிட்டு, கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வைக் காணுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026
“காந்திக்கு ஆட்டுப்பால் தேடிக்கொடுத்த இலங்கை சிறுமி” - இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் அன்பளிப்பு!
Local
13 August 2026
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026
நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!
Local
13 August 2026
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026
ஜப்பானிய 'அனிமே' கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டும் இந்தோனேசியர்கள் : புதிய ட்ரெண்ட் அறிமுகம்!
Local
13 August 2026