General30 January 2026

இஸ்ரேலில் பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய இலங்கையர் கைது

இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்தச் சம்பவத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 
2025 மே மாதம் தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற குறித்த இலங்கையர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
இது சிறுமிக்கு எதிரான வன்கொடுமை என்பதால், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. 
 
இதேவேளை குறித்த நபர் தனது அதிகாரப்பூர்வ தொழிலை தவிர்த்து வெளிப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 
 
இந்தநிலையில், இஸ்ரேலில் இது போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தப்படுதல் போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. 
 
இந்த சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்கள் அந்த நாட்டின் சட்டங்களையும் சமூக நெறிமுறைகளையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes