General31 January 2026

வேலை நேரத்தில் விளையாட்ட? ஊழியருக்கு விழுந்த பலத்த இடி - விவாதங்களும் எழுந்தன

வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு தீராதப் போராகவே இருந்து வருகிறது. 
 
அந்த வகையில், மேலதிக நேர வேலையின் (Overtime) போது Reddit தளத்தைப் பயன்படுத்திய ஒரு இளம் ஊழியருக்கு அவரது முகாமையாளர் விடுத்துள்ள மிரட்டல் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 
 
ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் ஊழியர் ஒருவர், இரவு நேரத்தில் மேலதிக வேலை (OT) செய்து கொண்டிருந்த போது, கணினியில் Reddit இணையத்தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். 
 
இதைக் கவனித்த அவரது முகாமையாளர், உடனடியாக அவருக்கு மின்னஞ்சல் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலதிக நேர வேலைக்காக நிறுவனம் பணம் வழங்கும் போது, அந்த நேரத்தை வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்காக அவரது சம்பளத்தில் ஒரு பகுதியை வெட்டப் போவதாகவும் முகாமையாளர் மிரட்டியுள்ளார். 
 
இந்த விவகாரம் Reddit தளத்திலேயே பகிரப்பட்ட போது, பலரும் பலவிதமான கருத்துக்கள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நிறுவனம் OT பணம் வழங்கும் போது, அந்த நேரத்தில் வேலை செய்வது தான் முறை. 
 
பொழுதுபோக்குவதற்காக நிறுவனம் பணம் வழங்காது" என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ரோபோக்களைப் போல மனிதர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. 5-10 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வேலையின் தரத்தையே கூட்டும்" என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். 
 
வேலை நேரத்தில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது தொடர்பில் காவல்துறையினர் அல்லது சட்ட நிபுணர்கள் குறிப்பிடும் போது, நிறுவனத்தின் கொள்கை வழிகாட்டல்களை மீறுவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Recomands
Hiru TV News | Programmes