General30 January 2026

2026 உலகக்கிண்ணத்தில் அமெரிக்க அணியில் இலங்கை வீரர்

2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச 20க்கு 20 கிரிக்கட் தொடருக்கான அமெரிக்க அணியில், முன்னாள் இலங்கை வீரர் ஷெஹான் ஜயசூரிய இடம்பிடித்துள்ளார். 
 
ஷெஹான் ஜயசூரிய 2015 முதல் 2020 வரை இலங்கை தேசிய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 18 இருபத்துக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 
 
எனினும் 2021ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். 
 
தற்போது அமெரிக்க அணிக்காக தனது முதல் சர்வதேசப் போட்டியில் அவர் விளையாடவுள்ளார். 
 
இதேவேளை உலக கிண்ணத்துக்கான அமெரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் தம்மிக பிரசாத் செயற்படுகிறார். 
 
அமெரிக்க அணி, உலக கிண்ணப்போட்டிகளின் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளுடன் மோதவுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes