தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகின்ற 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் பணியாற்றியவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் ஓய்வுக்காக கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கட்சிகளுக்கு ஆதரவாக வெவ்வேறு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் அதிகபட்சமாக தி.மு.க. முதல் இடத்திலும், அ.தி.மு.க. 2 ஆம் இடத்திலும், த.வெ.க. 3 ஆவது இடத்திலும் வரும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான குணாகுகை பகுதியில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திடீரென்று அந்த பகுதியில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூடி டி.வி.கே..., டி.வி.கே... என சத்தமாக முழக்கமிட்டும், விசில் அடித்தும், த.வெ.க. கொடியை அசைத்தும் வீடியோ வெளியிட்டனர். இதனை பார்த்து அங்கிருந்த மற்ற கட்சியினரும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து த.வெ.க.விற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது என பலரும் கூறி வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களிலும் ஆரவாரத்துடன் இது போன்ற வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், தேர்தல் முடிவுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாவும், த.வெ.க. எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
Latest News
வெலிமடை சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல்: வெளியாக தகவல்
Local
01 May 2026
கதிரியக்கப் பொருள் தட்டுப்பாடு - புற்றுநோய் நோயாளிகளின் PET ஸ்கேன் சேவை பாதிப்பு
Local
01 May 2026
“சார்... அவன் தூங்கிட்டான் சார்!” - துருக்கியில் காணாமல் போன குழந்தையை மீட்க நடந்த 10 மணி நேர தேடுதல் படலம்!
Local
01 May 2026
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
Local
01 May 2026
குணா குகையில் விசிலடித்து TVK... TVK... என கோஷமிட்ட இளைஞர்கள்
Local
01 May 2026
அரச நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு
Local
01 May 2026
வெயிலுக்கு விடை கொடுக்கும் ‘தாமரை இலை’ - சீனாவில் வைரலாகும் விசித்திரமான முறை
Local
01 May 2026
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026