விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்றதன் விளைவாக, பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வம்சி மற்றொரு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கணவரிடம் தன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அந்தப் பெண் வம்சியின் அறைக்குச் சென்று இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பெண் தனது குழந்தையுடன் வம்சியின் அறைக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த வம்சி, பெண்ணிடம் இருந்த 18 மாத பெண் குழந்தையைப் பறித்து சுவற்றில் வேகமாக வீசினார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாமியாரிடம் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், தெளிவற்ற பதிலை அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் குழந்தை எங்கே என்று விஜயவாடா முழுவதும் தேடிப் பார்த்தனர்.
கடைசியில், வம்சி இறந்த குழந்தையுடன் குளக்கரை அருகே நிற்பதைக் கண்ட குடும்பத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வம்சியைக் கைது செய்து, குழந்தையின் உடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
வெலிமடை சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல்: வெளியாக தகவல்
Local
01 May 2026
கதிரியக்கப் பொருள் தட்டுப்பாடு - புற்றுநோய் நோயாளிகளின் PET ஸ்கேன் சேவை பாதிப்பு
Local
01 May 2026
“சார்... அவன் தூங்கிட்டான் சார்!” - துருக்கியில் காணாமல் போன குழந்தையை மீட்க நடந்த 10 மணி நேர தேடுதல் படலம்!
Local
01 May 2026
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
Local
01 May 2026
குணா குகையில் விசிலடித்து TVK... TVK... என கோஷமிட்ட இளைஞர்கள்
Local
01 May 2026
அரச நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு
Local
01 May 2026
வெயிலுக்கு விடை கொடுக்கும் ‘தாமரை இலை’ - சீனாவில் வைரலாகும் விசித்திரமான முறை
Local
01 May 2026
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026