International11 July 2026

கேரளாவில் உயிரிழந்த 18 மாதக் குழந்தை : மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு!

கேரள மாநிலம்  மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தையொன்றின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என அதன் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 5-ஆம் திகதி , வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் குறித்த குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டது.

இதற்காக, தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பெற்றோர் குழந்தையை அழைத்து சென்ற போது அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்டது.

மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் நிலை கவலைக்கிடமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகக் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சைபலனின்றி நேற்றிரவு  உயிரிழந்தது.

தமது குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes