Entertainment11 July 2026

தீபாவளிக்கு களமிறங்கும் ரன்பீர் கபூரின் 'ராமாயணா': டிரெய்லர் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பான 'ராமாயணா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, புகழ்பெற்ற இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்திய திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இரண்டு பாகங்களாகத் திரைக்கு வர உள்ளது. இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 24, 2026 அன்று வெளியாகிறது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை படக்குழுவினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் , சாய் பல்லவி ,யாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியால் இந்தப் படம்  மிகப்பெரியதொர் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே  உருவாக்கியுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes