Entertainment11 July 2026

விருப்பமே இல்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ்: தந்தை கஸ்தூரி ராஜா பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், தனுஷின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா முக்கியத் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "செல்வராகவனுக்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்தது, ஆனால் தனுஷிற்கு நடிக்க ஒரு துளியும் விருப்பமில்லை.

அவரது முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படப்பிடிப்பின் போது தனுஷ் எப்போதும் அழுதுகொண்டே தான் நடிப்பார்" என்று கூறியுள்ளார்.

மேலும், ஐந்தாறு படங்களில் நடிக்கும் வரை "என்னை சினிமாவில் இருந்து விட்டுவிடுங்கள் , நான் போய் விடுறேன்" என்று தனுஷ் கூறி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் அழுதுகொண்டே நடித்த தனுஷ், இன்று உலக அரங்கு வரை உயர்ந்து நிற்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes