General11 July 2026

25 வயதிலேயே முடிவுக்கு வந்த கால்பந்து கனவு: தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் காலமானார்!

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ், தனது 25ஆவது வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

நடப்பு கால்பந்து உலகக் கிண்ண தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்காக அனைத்து குழு நிலை போட்டிகளிலும் விளையாடிய அவர், அணியின் வரலாற்று வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இவரது மறைவு குறித்து தென்னாப்பிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி கூறுகையில், "தென்னாப்பிரிக்க கால்பந்து ஒரு சிறந்த திறமையான வீரரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜேடன் எடம்ஸின் மரணம் குறித்து ஊடகங்கள் யூகங்களை வெளியிட வேண்டாம் என்றும், குடும்பத்தாரின் தனிப்பட்ட உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் எடம்ஸின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes