Top Story
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பிரதான வீதிக்கு அருகில் இருந்த இந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்தையடுத்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதுடன், உயிரிழந்தவர்களின் உடலங்களை நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

நெடுங்காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும், அதற்கு முறையான தீர்வு வழங்கப்படாதமையினாலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விபத்து குறித்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபரங்களுக்கு
General04 June 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு
Video of the Day
Latest TV News Bulletin
International News

தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!

International 05 June 2026
தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!

"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"

International 05 June 2026
"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"

வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?

International 05 June 2026
வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!

International 05 June 2026
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!

"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!

International 05 June 2026
"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!

போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!

International 05 June 2026
போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!

உலகையே உலுக்கிய புடினின் அதிரடிப் பிரகடனம்!

International 05 June 2026
உலகையே உலுக்கிய புடினின் அதிரடிப் பிரகடனம்!

பொண்டாய் கடற்கரையில் 15 பேரின் உயிரை காப்பாற்றியவர் மீது, தந்தையை தாக்கியதாக குற்றச்சாட்டு!

International 04 June 2026
பொண்டாய் கடற்கரையில் 15 பேரின் உயிரை காப்பாற்றியவர் மீது, தந்தையை தாக்கியதாக குற்றச்சாட்டு!

சென்னை குப்பை கிடங்கில் தீ விபத்து - 100 வாகனங்கள் தீக்கிரை

International 04 June 2026
சென்னை குப்பை கிடங்கில் தீ விபத்து - 100 வாகனங்கள் தீக்கிரை

கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்

International 04 June 2026
கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்

விண்வெளி வேட்டைக்குத் தயாராகும் நாசாவின் புதிய தொலைநோக்கி : 1,00,000 புதிய கிரகங்களைக் கண்டறிய இலக்கு!

International 04 June 2026
விண்வெளி வேட்டைக்குத் தயாராகும் நாசாவின் புதிய தொலைநோக்கி : 1,00,000 புதிய கிரகங்களைக் கண்டறிய இலக்கு!

14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது

International 04 June 2026
14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது

நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!

International 04 June 2026
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!

ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

International 04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

International 04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
More News
General04 June 2026

கோப்பி பயிர்ச்செய்கைக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க பயிராகக் கருதப்படும் கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்தச் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கோப்பி பயிர்ச்செய்கையின் போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பரிந்துரைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் கோப்பி பயிர்ச்செய்கைகளுக்கு மட்டுமே இந்த புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப்பிக் கன்றுகள் நடப்பட்டதில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளுக்கான காப்புறுதித் தொகையானது, அந்தந்த ஆண்டுகளுக்குரிய காப்புறுதித் தொகையில் 7 வீத தவணை கட்டணத்தின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.இதற்கமைய முதலாம் ஆண்டுக்காக 510,000 ரூபாவும், இரண்டாம் ஆண்டுக்காக 660,000 ரூபாவும் மற்றும் மூன்றாம் ஆண்டுக்காக 840,000 ரூபாவும் காப்புறுதித் தொகையாக வழங்கப்படவுள்ளது. கோப்பி பயிர்ச்செய்கையின் போது விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டு யானைகளின் தாக்குதல், ஏனைய வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்கள் போன்ற பாதிப்புகளுக்கு இந்த அடிப்படைக் காப்புறுதி மூலம் இழப்பீடு வழங்கப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, தங்களின் பயிர்ச்செய்கைக்குக் காப்புறுதி செய்துள்ள தொகையிலிருந்து 0.5 சதவீதம் கூடுதல் தவணை தொகையைச் செலுத்துவதன் மூலம், திடீர் தீ விபத்துகள் மற்றும் மண்சரிவு போன்ற ஆபத்துகளுக்கான மேலதிக காப்புறுதிப் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வதற்குக் கோப்பி விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
கோப்பி பயிர்ச்செய்கைக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!
General04 June 2026

IMF நிதி கிடைத்தும் ரூபாய் மதிப்பிழப்பது ஏன்?

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) இரண்டு தவணை நிதிகள் ஒன்றாகக் கிடைத்த போதிலும், சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்திப்பதற்கான பிரதான காரணங்கள் குறித்து பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெளிவுபடுத்தியுள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின் ஊடாகவே அவர் இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். அந்நியச் செலாவணி மாற்று வீதத்தை ரூபாய்க்கும் டொலருக்குமான 'தேவையும் விநியோகமுமே' (Demand and Supply) தீர்மானிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் எமது சந்தையிலிருந்து அதிகப்படியான டொலர்கள் வெளியேறுவதற்கு 'எரிபொருள் நுகர்வு அதிகரித்துள்ளதே முதன்மைக் காரணி என்றார். சாதாரணமாக ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் செலவினம், தற்போது 700 முதல் 800 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. IMF மூலம் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்து கையிருப்பு உயர்ந்தாலும், நாட்டின் எதிர்காலக் கடன் மறுசெலுத்துகை மற்றும் சந்தை நம்பிக்கையைப் பேணுவதற்காக மத்திய வங்கியால் அளவுக்கு அதிகமாக டொலர்களைச் சந்தைக்குள் விநியோகிக்க முடியாது. ரூபாய் மேலும் மதிப்பிழக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஏற்றுமதியாளர்கள் தங்களிடமுள்ள டொலர்களை உடனடியாக ரூபாயாக மாற்றுவதைத் தாமதப்படுத்துகின்றனர். இது சந்தையில் டொலர் தட்டுப்பாட்டை மேலும் தீவிரமாக்குகிறது. "மத்திய வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வாரம் தற்காலிகமாக ரூபாயின் மதிப்பை உயர்த்தியிருந்தாலும், அதனை அடிக்கடி செய்ய முடியாது. டொலருக்கான உலகளாவிய அழுத்தமும், எரிபொருள் தேவையும் குறையாதவரை ரூபாயின் இந்த ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முடியாது.பொருளாதாரம் இவ்வாறு அடிக்கடி ஏறி இறங்குவது நல்லதல்ல." என அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த அதன் விலையைச் சந்தை விலைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதே பிரதான வழியாகும். இது மக்களுக்கு சுமையாக இருந்தாலும், நுகர்வைக் குறைக்காமல் இந்த நெருக்கடியை முகாமை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார். நிலக்கரிப் பிரச்சினை மற்றும் நாம் செலுத்திய கூடுதல் பிரீமியம் போன்ற நஷ்டங்களை மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, வெளிநாட்டுக் கல்விக்கான கட்டணங்களைச் செலுத்துவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இந்த உலகளாவிய நெருக்கடி நீடிக்கும் வரை தொடர வாய்ப்புள்ளது. இதற்குத் தீர்வாக, அரசாங்கம் எரிபொருள் விலையைச் சமநிலைப்படுத்துவதோடு, ஏழை மக்களுக்கு 'அஸ்வெசும' (Aswesuma) போன்ற நலத்திட்டங்கள் ஊடாக நிவாரணங்களை வழங்கி, மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
IMF நிதி கிடைத்தும் ரூபாய் மதிப்பிழப்பது ஏன்?
General04 June 2026

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகளவில் பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 86.6 கோடி பேர் நோய்வாய்ப்படுவதுடன், 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வெறும் 9 சதவீதம் மட்டுமே உள்ள போதிலும், உணவினால் ஏற்படும் ஒட்டுமொத்த நோய் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பகுதியை (33%) இந்த குழந்தைகளே எதிர்கொள்கின்றனர்.இந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு மரணத்தை விளைவிப்பதுடன், உணவில் கலந்திருக்கும் ஆசனிக், ஈயம் போன்ற இரசாயன நச்சுகள் அவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதித்து ஆயுட்கால நரம்பியல் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. பிராந்திய ரீதியாக ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இந்த பாதிப்புகள் மிக உயர்வாகப் பதிவாகியுள்ளன.உணவு நச்சுத்தன்மையால் ஏற்படும் மரணங்களில் 73 சதவீதத்துக்கு பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற உயிரியல் காரணிகளை விட இரசாயன நச்சுகளே முக்கிய காரணமாக அமைகின்றன. குறிப்பாக, உணவில் கலக்கும் கனிம ஆசனிக் 42 சதவீத மரணங்களுக்கும், ஈயம் (Lead) 31 சதவீத மரணங்களுக்கும் காரணமாக அமைவதுடன், இவை மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் தூண்டுகின்றன. ஆரோக்கியப் பாதிப்புகளுக்கு அப்பால், இந்த நோய்த்தாக்கங்களால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் போவதால் உலகளாவிய உற்பத்தித்திறனில் ஆண்டுக்கு சுமார் 310 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.எனினும், சுத்தமான குடிநீர், முறையான சுகாதாரம் மற்றும் உணவை பாதுகாப்பாகக் கையாளுதல் போன்ற எளிய நடைமுறைகள் மூலம் இந்த பெரும் மனித உயிரிழப்புகளையும் நோய்களையும் தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
General04 June 2026

ஜனாதிபதி, பிரதமர் தோன்றும் போலி 'Deepfake' காணொளிகள் - இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி 'Deepfake' காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையவழியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகளுக்காகவே இவ்வாறான போலி காணொளிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறிப்பிட்ட சில திட்டங்களில் பண முதலீடு செய்யுமாறும், அதனூடாக அதிக இலாபம் பெறலாம் என்றும் மக்களை ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இக்காணொளிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்களுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி, விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனைய முக்கிய ஆளுமைகளின் உருவங்களும் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.இவ்வாறான ஏமாற்று முதலீட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான போலி காணொளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்தக் காணொளிகளுடன், பார்வையாளர்களை ஏமாற்றும் வகையிலான இணையத்தள இணைப்புகளும் (Links) இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த இணைப்புகள் தனிப்பட்ட தரவுகளையும் பணத்தையும் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.எனவே, இணையப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான இணைப்புகளைப் பின்தொடர வேண்டாம் என்றும், தங்களின் தனிப்பட்ட இரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
ஜனாதிபதி, பிரதமர் தோன்றும் போலி 'Deepfake' காணொளிகள் - இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை
General04 June 2026

நாடாளுமன்றத்தின் சட்டவாக்க வேகம்: சிறிசேன ஆட்சியை முந்தியது அநுரவின் நிர்வாகம்

ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகிய இருவரின் முதல் 18 மாத கால நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொடர்பான ஒப்பீட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பை தளமாகக் கொண்ட 'வெரிட்டே ரிசர்ச்' என்ற ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஆட்சியின் முதல் 6 மாதங்களில் மைத்ரிபால சிறிசேனவின் நிர்வாகமே சட்டம் இயற்றுவதில் முன்னிலையில் இருந்தது. அப்போது அநுரவின் நிர்வாகத்தை விட மூன்று மடங்கு அதிக சட்டமூலங்களை சிறிசேன அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டதுடன், இரண்டு மடங்கு அதிக சட்டங்களையும் நிறைவேற்றியது.எனினும், 9 மாத காலப்பகுதியில் அநுர குமாரவின் நிர்வாகம் சட்டங்களை நிறைவேற்றுவதில் சிறிசேனவின் அரசுக்கு நிகராக முன்னேறியது. தொடர்ந்து 18 மாத கால முடிவில், அநுரவின் நிர்வாகம் 32 சட்டங்களை நிறைவேற்றி முன்னிலை பெற்றுள்ளது. இதே காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேனவின் நிர்வாகத்தால் 20 சட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருந்தன.வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த சட்டமூலங்களின் எண்ணிக்கையில் மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கம் 54 சட்டமூலங்களுடன் முன்னிலையில் இருந்தது. அநுரவின் அரசாங்கம் 50 சட்டமூலங்களையே வெளியிட்டது. இருப்பினும், தான் வெளியிட்ட சட்டமூலங்களில் பெரும்பாலானவற்றைச் சட்டங்களாக மாற்றுவதில் அநுரவின் நிர்வாகம் அதிகத் திறன் காட்டியுள்ளது.மைத்ரிபால சிறிசேனவின் முதல் 18 மாதங்களில் நாடாளுமன்றம் 126 நாட்கள் கூடியது. அநுர குமாரவின் ஆட்சியில் நாடாளுமன்றம் 136 நாட்கள் கூடியுள்ளது. இவ்விரு ஆட்சிக் காலங்களிலுமே தலா ஒரு இடைக்கால பாதீடும், ஒரு முழு ஆண்டுக்கான பாதீடும் சமர்ப்பிக்கப்பட்டன.முன்மொழியப்படும் சட்டமூலங்களை இறுதிச் சட்டங்களாக மாற்றுவதில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை விட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அதிக வேகத்துடனும் வினைத்திறனுடனும் செயல்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
நாடாளுமன்றத்தின் சட்டவாக்க வேகம்: சிறிசேன ஆட்சியை முந்தியது அநுரவின் நிர்வாகம்
International News

தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!

International 05 June 2026
தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!

"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"

International 05 June 2026
"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"

வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?

International 05 June 2026
வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!

International 05 June 2026
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!

"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!

International 05 June 2026
"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!

போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!

International 05 June 2026
போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!

உலகையே உலுக்கிய புடினின் அதிரடிப் பிரகடனம்!

International 05 June 2026
உலகையே உலுக்கிய புடினின் அதிரடிப் பிரகடனம்!

பொண்டாய் கடற்கரையில் 15 பேரின் உயிரை காப்பாற்றியவர் மீது, தந்தையை தாக்கியதாக குற்றச்சாட்டு!

International 04 June 2026
பொண்டாய் கடற்கரையில் 15 பேரின் உயிரை காப்பாற்றியவர் மீது, தந்தையை தாக்கியதாக குற்றச்சாட்டு!

சென்னை குப்பை கிடங்கில் தீ விபத்து - 100 வாகனங்கள் தீக்கிரை

International 04 June 2026
சென்னை குப்பை கிடங்கில் தீ விபத்து - 100 வாகனங்கள் தீக்கிரை

கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்

International 04 June 2026
கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்

விண்வெளி வேட்டைக்குத் தயாராகும் நாசாவின் புதிய தொலைநோக்கி : 1,00,000 புதிய கிரகங்களைக் கண்டறிய இலக்கு!

International 04 June 2026
விண்வெளி வேட்டைக்குத் தயாராகும் நாசாவின் புதிய தொலைநோக்கி : 1,00,000 புதிய கிரகங்களைக் கண்டறிய இலக்கு!

14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது

International 04 June 2026
14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது

நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!

International 04 June 2026
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!

ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

International 04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

International 04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Sports Stories
Explore More
உலகை அதிர வைத்த 23 வயது இலங்கை இளைஞர்!

உலகை அதிர வைத்த 23 வயது இலங்கை இளைஞர்!

இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே (Rumesh Pathirage), ரோம் டைமண்ட் லீக் (Rome Diamond League) தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாத்திய சாதனை மூலம் ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும், உலக வரலாற்றின் மிகச்சிறந்த தடகள வீரர்களின் வரிசையில் எட்டாவது இடத்தையும் பிடித்து வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார். ஆண்கள் பிரிவிற்கான ஈட்டி எறிதல் போட்டியின் தனது இரண்டாவது முயற்சியிலேயே இந்த பிரம்மாண்ட தூரத்தை எட்டிய பத்திரகே, புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன், இது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தூரமாக (World-leading mark) பதிவாகியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட வாழ்வின் மிகச்சிறந்த (Personal Best) சாதனையாகவும் அமைந்துள்ளது. இதன் மூலம், கடந்த 20 வருடங்களாக ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சன் (Andreas Thorkildsen) வசம் இருந்த 90.34 மீற்றர் ரோம் டைமண்ட் லீக் போட்டி சாதனையை முறியடித்து, இளம் வயதிலேயே உலகத் தடகள அரங்கில் இலங்கையின் கொடியை ருமேஷ் பத்திரகே உயரப் பறக்கவிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?

முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?

இந்திய இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது தலைமையில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2026 ஐ வென்று மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. தலைவர் பதவி மட்டுமன்றி, இருபதுக்கு 20 அணியில் அவரது இடம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி விபரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் இச்செய்தி கசிந்துள்ளது. 2028 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலக்காகக் கொண்டு, எதிர்கால அணியைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) புதிய தலைவர் ஒருவரைத் தேடி வருவதாகக் கூறப்படுகின்றது.சூர்யகுமார் யாதவின் சமீபத்திய விளையாட்டில் உள்ள பின்னடைவே பிசிசிஐயின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவர் 113 டி20 போட்டிகளில் விளையாடி 3,272 ஓட்டங்களை குவித்துள்ளார். எனினும், அண்மைக்காலமாக அவரது புள்ளிவிபரங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.2024 ஜூலையில் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் 43.60 ஆக இருந்த அவரது ஓட்டச் சராசரி, அணித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் 25.88 ஆகக் குறைந்துள்ளது. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் 6 அரைச்சதங்களைப் பெற்றுள்ள போதிலும், 4 தடவைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாமலும் ஆட்டமிழந்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடரிலும் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய சூர்யகுமார், 20.76 என்ற குறைந்த சராசரியுடன் 270 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.ஆட்டத்திறன் வீழ்ச்சியடைந்த போதிலும், அவரது தலைமையில் இந்திய அணி பல முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவின் தலைமையின் கீழ் இந்திய அணி 2025 ஆசியக் கிண்ணம் மற்றும் 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2023 ஆசியக் கிண்ணம் மற்றும் 2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிகளிலும் அவர் அங்கத்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பிகார் மாநிலத்திற்கு கிடைத்த சரியான அங்கீகாரம் வைபவ் சூர்யவன்ஷி - விளையாட்டு ஊடகவியலாளரின் காணொளி வைரல்

பிகார் மாநிலத்திற்கு கிடைத்த சரியான அங்கீகாரம் வைபவ் சூர்யவன்ஷி - விளையாட்டு ஊடகவியலாளரின் காணொளி வைரல்

ஐபிஎல் 2026 தொடரில் அசத்திய 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, பிகார் மாநிலத்திற்கு ஒரு சிறந்த அடையாளமாக உருவெடுத்துள்ளதாக பிரபல விளையாட்டு ஊடகவியலாளர் ரிதிமா பதக் தெரிவித்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிகாரின் சமஸ்திபூர் நகரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, இந்திய சிரேஷ்ட அணிக்காக இன்னும் விளையாடாத நிலையிலும், நடப்பு ஐபிஎல் தொடரில் காட்டிய அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் ரிதிமா பதக், வைபவ்வின் எழுச்சி பிகார் மாநில மக்கள் பெருமைகொள்ளும் ஒரு விடயமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னர் எமது சிறுவயதில் பாடசாலை, கல்லூரிகளில் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்குச் சிலர் தயங்கினர். அதற்குப் பின்னர் மகேந்திர சிங் தோனியின் வருகையும், 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' திரைப்படமும் பிகார் மக்களுக்கு ஒரு புதிய அடையாளத்தையும் பெருமையையும் கொடுத்தன. ஆனால், பிகாரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் பிரிந்து சென்றதால், அந்த பெருமைகள் அனைத்தும் ஜார்கண்ட் பக்கமே சென்றன.ஆனால் இப்போது, பிகாரின் சொந்த மண்ணைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி உருவாகியுள்ளார். இனி எந்தவொரு பிகாரியும் தங்களை பிகார் என்று சொல்வதற்குத் தயங்க மாட்டார்கள். பிகார் மாநிலத்திற்குத் தேவையான சரியானதொரு மக்கள் தொடர்பாடல் அடையாளமாக வைபவ் சூர்யவன்ஷி விளங்குகின்றார்" எனத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
இலங்கை வீரர் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முன்னேற்றம்!

இலங்கை வீரர் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முன்னேற்றம்!

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனத்தின் (World Athletics) புதிய தரவரிசைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார். அதன்படி, உலகத் தரவரிசையில் 7வது இடத்திலிருந்த ருமேஷ் தரங்க, தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சிறப்பான திறமையின் பலனாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விளையாட்டு தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம், எதிர்வரும் சர்வதேச போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் இலங்கைக்கு மேலும் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (யூன் 01) நடைபெற்ற மொரோக்கோ டயமண்ட் லீக், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், 85.97 மீற்றர் தூரம் எறிந்து ருமேஷ் தரங்க இரண்டாம் இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
41 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!

41 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!

ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீசத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் பெற்று பலம் சேர்த்தனர்.304 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அபாரமாகச் செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.அத்துடன் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
சிஎஸ்கே-வின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - விமர்சித்த அஷ்வின்

சிஎஸ்கே-வின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - விமர்சித்த அஷ்வின்

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8ஆவது இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. 14 போட்டிகளில் 12 புள்ளிகளை மட்டுமே பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ், இந்த முறை PLAY OFF சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. சஞ்சு சம்சன் போன்ற சில வீரர்களின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும், அணியால் இறுதிவரை சாதிக்க முடியவில்லை. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தில் அணியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். "சென்னை சுப்பர் கிங்ஸ் தனது ஏல உத்திகளை (Auction strategies) மாற்றி அமைக்க வேண்டும். 14 கோடிக்கு ஒரு வீரரை எடுப்பதற்குப் பதிலாக, வெங்கடேஷ் ஐயர், ஜேசன் ஹோல்டர் போன்ற வீரர்களை தலா 7 கோடிக்கு எடுத்து, இளமையையும் அனுபவத்தையும் கலந்திருக்கலாம். அணியில் வீரர்களுக்கான ரோல் கிளாரிட்டி (Role clarity) இல்லை. அதோடு, பிரேவிஸ் மற்றும் துபேயை ஃபினிஷர்களாக களம் இறக்கிய சிஎஸ்கே-வின் முடிவுகளும் தவறாக அமைந்தன." காயங்கள் காரணமாக 44 வயதான எம்.எஸ்.தோனி இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. எனினும், அணியில் அவரது பங்களிப்பு குறித்து தலைமை பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் "எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், அணியோடு நெருக்கமாகவே இருந்தார். குறிப்பாக இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவதிலும், அணியின் ஒற்றுமையைக் கொண்டு செல்வதிலும் அவரது தாக்கம் மிக முக்கியமாக இருந்தது," என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காயங்கள், தவறான திட்டமிடல் மற்றும் ஏல உத்திகள் என பல சவால்களை எதிர்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ், அடுத்த சீசனில் பலமான மீள் வருகையைத் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விபரங்களுக்கு
2026 FIFA உலகக் கிண்ணம் - அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீரர்

2026 FIFA உலகக் கிண்ணம் - அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீரர்

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் 25 வயதுடைய விங்கர் (winger) ஆட்டக்காரரான நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இதன் மூலம் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் போட்டியிடத் தகுதிபெற்ற முதலாவது தமிழ் கால்பந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டோனி போபோவிக் (Tony Popovic)அறிவித்த 26 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் நிஷான் வேலுப்பிள்ளையின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது. ஏ-லீக் (A-League) தொடரில் 'மெல்போர்ன் விக்டோரி' (Melbourne Victory) அணிக்காக விளையாடும் நிஷான் வேலுப்பிள்ளை, உலகக் கிண்ணத்திற்குத் தேர்வாகியுள்ள 17 அறிமுக வீரர்களில் ஒருவராவார். நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவராவார். மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை, மல் கிரேவ்வில் உள்ள மசெனோட் கல்லூரியில் (Mazenod College) கல்வி கற்றார். பின்னர் கிளென் ஐரா எப்.சி (Glen Eira FC) இளையோர் அணியில் விளையாடி, மெல்போர்ன் விக்டோரி அகாடமி ஊடாகத் தனது திறமையை வெளிப்படுத்தினார். கடந்த 2024 ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியின் போது, பயிற்சியாளர் போபோவிக் இவரை முதன்முதலாக சர்வதேச அணிக்கு அழைத்திருந்தார். அந்தப் போட்டியில் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய நிஷான், அடுத்த 7 நிமிடங்களில் கோல் அடித்து அவுஸ்திரேலியாவின் 3-1 என்ற வெற்றியை உறுதி செய்தார். இதுவரை 7 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான் வேலுப்பிள்ளை, மொத்தம் 3 கோல்களை அடித்துள்ளார். இந்த 3 கோல்களும் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த வளர்ச்சி குறித்து மெல்போர்ன் விக்டோரி அணியின் கால்பந்து இயக்குனர் ஜோன் டிடுலிகா பாராட்டுத் தெரிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து கட்டமைப்பில், பீபாவினால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான 'கோனிபா' (CONIFA) அமைப்பின் கீழ் தமிழீழ தேசிய கால்பந்து அணி போட்டியிடுகிறது. இந்த அணி 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கோனிபா ஆசியக் கால்பந்து கிண்ணத்தை வென்றிருந்த போதிலும், பீபா உலகக் கிண்ணத்திற்குச் செல்வதற்கான நேரடிப் பாதை அதற்கு இல்லை. எனவே, அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு நிஷானின் இந்தத் தேர்வு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகக் கருதப்படுகிறது.

விபரங்களுக்கு
நடுவர் மீது ஐஸ் பையை எறிந்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட்: நடவடிக்கை எடுத்த நிர்வாகம்

நடுவர் மீது ஐஸ் பையை எறிந்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட்: நடவடிக்கை எடுத்த நிர்வாகம்

கடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது நடுவர் நிதின் மேனனை நோக்கி ஆக்ரோஷமாக ஐஸ் பையை எறிந்த குற்றத்திற்காக, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட்டிற்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் 10ஆவது ஓவரில் விக்கெட் வீழ்ந்தபோது அவர் இவ்வாறு நடந்துகொண்டார். இதற்காக அவருக்கு போட்டித் தொகையிலிருந்து 50% அபராதமும், 2 தகுதிக்குறைப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டன. ஏற்கனவே இந்த சீசனில் ஒழுங்கீனங்களுக்காக புள்ளிகளைப் பெற்றிருந்த டிம் டேவிட்டின் மொத்த தகுதிக்குறைப்பு புள்ளிகள் 5 ஆக உயர்ந்ததால், ஐபிஎல் விதிகளின்படி இந்த ஒரு போட்டித் தடை தானாகவே அமுலுக்கு வந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், டிம் டேவிட் அடுத்த ஐபிஎல் 2027 தொடரின் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?

அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?

பொலிவுட் திரையுலகின் முன்னணி மற்றும் பிரபல நட்சத்திர நடிகரான அமீர்கான் (Aamir Khan), தனது 61 ஆவது வயதில் 3 ஆவது முறையாக மீண்டும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் இணையதளங்களை அதிர வைத்துள்ளன. தனது தனித்துவமான நடிப்பால் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அமீர்கான், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொலிவுட்வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள புதிய விபரங்களின்படி, நடிகர் அமீர்கான் தனது நீண்ட காலத் தோழியான கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt) என்பவரை வரும் 5 ஆம் திகதி (நாளை) முறைப்படி கரம் பிடிக்க உள்ளதாகப் புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. 61 வயதிலும் தனது காதலைத் திருமண பந்தமாக மாற்றத் துணிந்துள்ள இந்த விசித்திர நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகினரையும், ரசிகர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இவர்களின் தற்போதைய புகைப்படங்கள் அவர் சமூக ஊடகங்களில் அசுர வேகம் எடுத்து வருகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு

"என் இசைக்கான குரல்" - எஸ்.பி.பியின் 80ஆவது பிறந்தநாளில் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு!

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நினைவுகளைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள் இன்று... அவர் வாழ்க, குரலாக.." திரையுலகில் தங்களுக்குள் இருந்த நெருங்கிய நட்பையும், தனது பல சூப்பர் ஹிட் பாடல்களுக்குப் பின்னணியாக இருந்த எஸ்.பி.பியின் குரலையும் நினைவு கூர்ந்து கமல் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விபரங்களுக்கு
இலட்சங்கள் முதல் கோடிகள் வரை ஜொலிக்கும் இந்திய சினிமா பிரபலங்களின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த மோதிரங்கள்

இலட்சங்கள் முதல் கோடிகள் வரை ஜொலிக்கும் இந்திய சினிமா பிரபலங்களின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த மோதிரங்கள்

திரையுலகில் காதல் திருமணக் கதைகள் பல வந்தாலும், நட்சத்திரங்களின் விரல்களில் மின்னும் அந்த நிச்சயதார்த்த மோதிரங்கள் மட்டும் ஒவ்வொரு ஜோடியின் காதலையும் தனித்துவமாகப் பதிவு செய்துவிடுகின்றன. அதனால்தான், பிரபலங்களின் திருமண அறிவிப்பை விட அவர்களின் விரல்களை அலங்கரிக்கும் அந்த ஒரு மோதிரமே ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பேசு பொருளாக உள்ளன.இந்தியத் திரையுலகில் அதிக கவனம் ஈர்த்த, கோடிகள் மதிப்புள்ள சில நட்சத்திரங்களின் நிச்சயதார்த்த மோதிரங்களின் சுவாரசியப் பின்னணியை பார்க்கையில்,நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகாவின் நிச்சயதார்த்த மோதிரம், 16 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட வைர மோதிரமாகும். இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் தென்னிந்தியத் திரையுலகில் அதிகளவில் பேசப்பட்ட சமந்தாவின் நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு, 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.நயன்தாரா திருமணத்தின் போது, நயன்தாரா அணிந்திருந்த வைரத்தின் அளவு மற்றும் அதன் தரத்தை வைத்து, அந்த மோதிரத்தின் மதிப்பு 50 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என நகை வல்லுநர்கள் கணித்திருந்தனர்.நடிகர் சித்தார்த்தை மணந்த அதிதி ராவ், விண்டேஜ் (Antique) பாணியிலான மோதிரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். இரு ஆன்மாக்களின் இணைப்பைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'இரட்டைக்கல் வைர மோதிரம்' (Toi et Moi style) இவருடைய தனித்துவ அடையாளமாக அமைந்தது.ரன்வீர் சிங்கின் காதலியான தீபிகா, கண்ணைக் கவரும் செவ்வக வடிவ ஒற்றைக்கல் (Emerald-cut Solitaire) வைர மோதிரத்தை அணிந்திருந்தார். இதன் மதிப்பு 1 கோடி முதல் 2.7 கோடி ரூபாய் வரை இருக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.நிக் ஜோனஸை கரம்பிடித்த பிரியங்கா சோப்ராவின் மோதிரம், உலகப் புகழ்பெற்ற டிஃப்பனி (Tiffany & Co.) நிறுவனத்தின் 'குஷன் கட்' (Cushion-cut) வைரத்தால் வடிவமைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.இந்தப் பட்டியலில் உச்ச விலையில் இருப்பது ஷில்பா ஷெட்டியின் மோதிரம்தான். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 கரட் கம்பீரமான ஒற்றைக்கல் வைர மோதிரம் இவருடைய விரலை அலங்கரித்தது.திருமண பந்தத்திற்குள் நுழையும் இந்த நட்சத்திரங்களின் காதலைப் போலவே, அவர்களின் நிச்சயதார்த்த மோதிரங்களின் மதிப்பும், வடிவமைப்புமே திரையுலகில் என்றும் அழியாத பிரம்மாண்டக் கதைகளாக உலா வருகின்றன.

விபரங்களுக்கு
ஜேசன் சஞ்சயின் அறிமுகத் திரைப்படம் 'சிக்மா': ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

ஜேசன் சஞ்சயின் அறிமுகத் திரைப்படம் 'சிக்மா': ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. சுந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம், புதையல் வேட்டை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. 4 மாத காலப்பகுதியில் மொத்தம் 65 நாட்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு

"கைதி" வில்லனுக்குக் கல்யாணம் ? யார் அந்த இரகசிய நடிகை?

தமிழ் சினிமாவில் நுழைந்து மிகக் குறுகிய காலத்திற்குள் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸுக்கு, இந்த வாரம் இரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ மற்றும் அஜித் குமாருடன் ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்துத் தனக்கென ஒரு தனி இரசிகர்கள் பட்டாளத்தை அர்ஜுன் தாஸ் கொண்டுள்ளார். இவரது மிக முக்கிய அடையாளமான கம்பீரமான, தடிமனான மிடுக்கான பேஸ் (Bass) குரல், இவரது வில்லன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களுக்குப் பெரும் பலமாக அமைந்தது. ‘கைதி’ திரைப்படத்தில் நடித்த சிறந்த வில்லன் நடிப்பிற்காகத் தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருது மற்றும் பல முக்கிய சினிமா விருதுகளைப் பெற்றுள்ள இவர், பவன் கல்யாணுடன் இணைந்து தெலுங்கில் 'ஓஜி' (OG) திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ (Khan City) திரைப்படம் வரும் ஜூன் 26ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே இரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அர்ஜுன் தாஸ் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அதற்குள் அவரது திடீர் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தகவல்களின்படி, நடிகர் அர்ஜுன் தாஸ் இந்த வாரம் நடைபெறும் ஒரு தனிப்பட்ட சுப விழாவில் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவிருப்பதாகவும், இது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே மிக இரகசியமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அர்ஜுன் தாஸ் பிரபல நடிகை ஒருவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், சமூக வலைத்தளங்களில் தற்போது மணப்பெண் அந்த நடிகைதானா என இரசிகர்கள் விவாதங்களை ஆரம்பித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
'கருப்பு' திரைப்படத்தின் கதை உருவான விதம் குறித்து அதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

'கருப்பு' திரைப்படத்தின் கதை உருவான விதம் குறித்து அதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

"நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக, சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் என் கழுத்தில் கத்தி வைத்து எனது நகையைப் பறித்துச் சென்றனர். பல வருடங்கள் கழித்து அந்த நகை மீட்கப்பட்ட போதிலும், அதனை நீதிமன்றம் மூலமாகத் திரும்பப் பெறுவதற்குப் பெரும் அலைச்சலைச் சந்திக்க நேரிட்டது. இந்தச் சம்பவத்தை ஏன் ஒரு திரைப்படமாக எடுக்கக்கூடாது என்று யோசித்தேன்.ஆனால், இந்த ஒரு புள்ளியை மட்டும் வைத்துப் பார்க்கும்போது கதைக்கான ஐடியா மிகச் சிறியதாகவே இருந்தது.அதன் பின்னரே, மாசாணியம்மன் கோயிலில் மக்கள் மிளகாய் அரைத்து வழிபடும் நம்பிக்கையையும், எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தையும் இணைத்து ஒரு கதையை உருவாக்கினேன். இப்படித்தான் 'கருப்பு' திரைப்படத்தின் கதை உருவானது. என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி விவரித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////