General20 September 2025

இணைய மூலமான துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சிறார்கள் - இலங்கையில் நடந்த துயரம்

நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 206 சிறார்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
குறித்த காலகட்டத்தில் 28 சிறார்கள் இணைய வழியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், பாதிக்கப்படக்கூடிய சிறார்கள் உள்ள பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தி விசேட குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 118 பெண்கள் இணையத்தளம் ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes