இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு கொள்கலன்களை முன்பதிவு செய்யும் முறை மற்றும் அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே எரிவாயு கொள்கலன் முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்திற்குப் பிறகு, வீட்டு உபயோக எரிவாயு கொள்கலன்களின் விலை 60 ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) உயர்ந்துள்ளது.
அதேபோன்று, வணிக பயன்பாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் மட்டும் மூன்று கட்டங்களாக நகரங்களுக்கு ஏற்ப 196 ரூபாய் முதல் 218 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு எரிவாயு கொள்கலனை முன்பதிவு செய்து, அடுத்த கொள்கலனை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச இடைவெளி நகரங்களில் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் இந்த இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு முறை கடவுச்சொல்’ (OTP) அடிப்படையிலான விநியோக முறை, இனி நிரந்தரமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொள்கலன் மூலமான விநியோகத்தை படிப்படியாகக் குறைத்து, விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் முறையை (PNG) உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026
ஐ.பி.எல். கிரிக்கெட் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பயணம்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
Local
01 May 2026
ரஜினிகாந்தின் புதிய படத்தில் மகனாக களம் இறங்கும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்
Local
01 May 2026
அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?
Local
01 May 2026
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' ஆக உயர்வு: அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் வாய்ப்பு?
Local
01 May 2026
சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!
Local
01 May 2026
மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு யார் காரணம்? - இயன் பிஷப் காட்டம்
Local
01 May 2026