ஈரான் மீதான போர் காரணமாக உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் விளைவாக வாரத்திற்கு சுமார் 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் உற்பத்தி செய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளதாக உலகின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் டோர் ஹோல்செதர் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால், உலகளவில் நைட்ரஜன் உர உற்பத்தி சுமார் அரை மில்லியன் டன்களால் குறைந்துள்ளது.
"உரப் பயன்பாடு இல்லையெனில், முதல் போகத்திலேயே சில பயிர்களின் விளைச்சல் 50 வீதம் வரை குறையக்கூடும். இதன் அர்த்தம் என்னவென்றால், உரத் தட்டுப்பாட்டினால் ஒவ்வொரு வாரமும் உலகிற்கு கிடைக்க வேண்டிய 10 பில்லியன் வேளை உணவுகள் கிடைக்காமல் போகும்," என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான போர் ஆரம்பமானதில் இருந்து உரங்களின் விலை 80 வீதம் வரை அதிகரித்துள்ளது. இது தவிர எரிபொருள் விலை மற்றும் ஏனைய விவசாய இடுபொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கான விலை இன்னும் போதிய அளவில் அதிகரிக்கவில்லை என ஹோல்செதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது, செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே ஒரு 'விலைப் போர்' உருவாகலாம்.
செல்வந்த நாடுகள் அதிக விலை கொடுத்து உணவை இறக்குமதி செய்யும் திறன் கொண்டவை.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த நாடுகள் அதிக விலையைக் கொடுத்து உணவை வாங்க முடியாமல் தவிக்கும். இதனால் அங்கு பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பிரித்தானியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும்.
பிரித்தானியாவின் உணவு மற்றும் பானங்கள் சம்மேளனத்தின் கணிப்பின்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் உணவுப் பொருட்களின் மீதான பணவீக்கம் 10 வீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
Local
01 May 2026
குணா குகையில் விசிலடித்து TVK... TVK... என கோஷமிட்ட இளைஞர்கள்
Local
01 May 2026
அரச நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு
Local
01 May 2026
வெயிலுக்கு விடை கொடுக்கும் ‘தாமரை இலை’ - சீனாவில் வைரலாகும் விசித்திரமான முறை
Local
01 May 2026
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மரணம்: நால்வர் அடங்கிய மருத்துவக் குழு நியமனம்
Local
01 May 2026
"நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்" - சதிகாரக் குழுக்களுக்கு அடிபணியப் போவதில்லை என அரசாங்கம் உறுதி!
Local
01 May 2026
புகைப்படம் எடுப்பதில் மோதல்: திருமண வரவேற்பு விழாவில் மணமகன் - மணமகள் வீட்டார் கைகலப்பு!
Local
01 May 2026
உரத் தட்டுப்பாட்டினால் வாரத்திற்கு 10 பில்லியன் வேளைக்கான உணவுகள் இழக்கப்படும் அபாயம்
Local
01 May 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை - ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
Local
01 May 2026
அப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு: சீனாவில் ஐபோன் விற்பனை சாதனை!
Local
01 May 2026