General01 May 2026

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று கொழும்பு, புதுக்கடை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

அவரது உருவச்சிலைக்கு அருகில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மறைந்த தலைவரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes