கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் ரேபிஸ் (விசர் நாய் கடி) தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மாதம் 27ஆம் திகதி வீதி வழியே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு காய்ச்சலோ அல்லது வேறு பெரிய உடல்நலப் பாதிப்புகளோ முன்னதாக இருந்திருக்கவில்லை. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதப்பட்டதால், இது 'இயற்கைக்கு மாறான மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அவரது உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் நேற்று (6) வெளியான பரிசோதனை முடிவுகளில், சிறுமிக்கு ரேபிஸ் (Rabies) தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு சிறுமி தற்செயலாக அருகில் இருந்த குப்பைக்குழி ஒன்றில் விழுந்துள்ளார்.
அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் குப்பைக்குழியில் இருந்த ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் மூலம் அல்லது நகக்கீறல் மூலம் சிறுமிக்குத் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
காயம் ஏற்பட்ட தருணத்தில் சிறுமிக்கு நாய் கடித்ததற்கான அறிகுறிகள் தென்படாததால், ஆரம்பத்தில் இதற்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
தற்போது ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறிய காயங்கள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Latest News
மாறிவரும் அரசியல் சதுரங்கம் - விஜய்யைத் தொடர்ந்து ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!
Local
07 May 2026
'ஜானி ஜானி எஸ் பாப்பா' பாடல் சிறுவர்களை பொய் சொல்லத் தூண்டுகிறது: அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
Local
07 May 2026
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் குற்றச்சாட்டு முற்றுமுழுதான பொய்: எதிர்க்கட்சித் தலைவர் கடும் காட்டம்!
Local
07 May 2026
தரம் 6 மாணவர் அனுமதி - இரண்டாம் கட்ட மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்
Local
07 May 2026
ஆளுநருக்கு எதிராக நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
Local
07 May 2026
சிறுமியின் மரணத்தில் மர்மம் - ஆய்வக சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
07 May 2026
"மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?" - அர்ச்சுனா எம்.பி கேள்வி
Local
07 May 2026
தாமதமாகும் பதவியேற்பு - ஆளுநரின் அதிகாரமும் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகளும்
Local
07 May 2026
தோனிக்கு பிரியாவிடைப் போட்டி கிடைக்குமா? – நிபந்தனையுடன் எதிர்வுகூறும் ஆர். அஸ்வின்
Local
07 May 2026
விஜய்யின் 'ஜனநாயகன்' விரைவில்? : ரசிகர்கள் உற்சாகம்!
Local
07 May 2026