Top Story
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய உயிராபத்தான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை, கப்பல் போக்குவரத்துக்கு மூடப்படுவதாக ஈரானின் மத்திய இராணுவக் கட்டளையகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் ஈரான் விவரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபரங்களுக்கு
General20 June 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
International News

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்

International 21 June 2026
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்

தங்கம், வெள்ளி விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் உள்ளே!

International 21 June 2026
தங்கம், வெள்ளி விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் உள்ளே!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் கெய்ர் ஸ்டார்மர்?

International 21 June 2026
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் கெய்ர் ஸ்டார்மர்?

ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

International 21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு

International 21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு

ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை

International 21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்

International 21 June 2026
உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்

அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு

International 20 June 2026
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

International 20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா

International 20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா

ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு

International 20 June 2026
ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு

2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!

International 20 June 2026
2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!

அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!

International 20 June 2026
அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!

நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது

International 20 June 2026
நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது

வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு

International 20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
More News
General21 June 2026

பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக UNICEF வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. உலகளவில் சுமார் 1.8 பில்லியன் குழந்தைகள் வறட்சியினாலும், 1.2 பில்லியன் குழந்தைகள் கடுமையான வெப்ப அலையினாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 662 மில்லியன் குழந்தைகள் வெப்பமண்டல புயல்களாலும், 337 மில்லியன் குழந்தைகள் ஆற்று வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் மட்டும் 1 பில்லியன் குழந்தைகள் மலேரியா ஆபத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், பருவநிலை விபரீதங்களால் 85 நாடுகளில் 242 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் உலகளாவிய வானிலையை மாற்றி அமைக்கும் 'சுப்பர் எல் நினோ' தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் உணவு உற்பத்தியை அச்சுறுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், கடந்த ஆண்டுகளில் உலகளவில் அரிசி மற்றும் இதர தானியங்கள் சாதனை அளவில் அறுவடை செய்யப்பட்டு சேமிப்பில் உள்ளதால், உணவுப் பற்றாக்குறை ஆபத்து சற்றுக் குறைந்துள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
General21 June 2026

22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் (Qantas Airways) நிறுவனம், சிட்னியிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் உலகின் மிக நீண்ட நேரடி வானூர்தி சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.   சுமார் 20 முதல் 22 மணிநேரங்கள் வரை நீடிக்கும் இந்த அதிநீண்ட பயணத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான சோர்வையும், தூக்கக் குறைபாட்டையும் போக்க, அறிவியல் பூர்வமான புதிய உத்திகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் எழுந்து நடமாடுவதற்கும், உடலைத் தளர்த்துவதற்கும் ஏதுவாக பிரத்யேக 'Wellness Zone' உருவாக்கப்பட்டுள்ளது. இது குளிர்ந்த நீச்சல் குளத்தின் அருகே இருப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் ஒளியமைப்பைக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பிரதிபலிக்கும் வகையில் 14 விதமான ஒளியமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை வானூர்திக்குள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை செயற்கையாக உருவாக்கி, பயணிகளின் உடற்கடிகாரத்தை (Body Clock) புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப மாற்ற உதவும். வானூர்தி புறப்பட்ட உடனேயே உணவு வழங்குவதைத் தவிர்த்து, அறிவியல் முறைப்படி நேரத்தைக் கணித்து உணவு வழங்குவதன் மூலம் பயணிகளின் விழிப்புணர்வுத் திறன் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Economy வகுப்பில் இருக்கைகளுக்கு இடையேயான இடைவெளி 33 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் கட்டணத்தில் 'Economy Plus' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எடைக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வானூர்தியில் 238 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நிறுத்தத்தைக் தவிர்த்து நேரடியாகச் செல்வதால், மற்ற வானூர்திகளை விட 20% கூடுதல் கட்டணத்தைப் பயணிகளிடம் இருந்து வசூலிக்க குவாண்டாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நேரத்தை சேமிக்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் உயரமான பயணிகள் இந்த வசதியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், கூடுதல் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

விபரங்களுக்கு
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
General21 June 2026

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.   இதன்படி ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.57 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்று 76.54 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலை 3.19 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
General21 June 2026

ஹோர்முஸ் நீரிணையில் 60 நாட்களுக்கு கட்டணங்கள் கிடையாது - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த 60 நாட்கள் போர்நிறுத்தக் காலம் முடிந்த பின்னரும் கூட ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் முழுமையடையத் தவறினால், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் 'காவல் தூதனாக' அமெரிக்கா ஆற்றிய, ஆற்றுகின்ற மற்றும் ஆற்றப்போகின்ற சேவைகளுக்கான செலவினங்களை ஈடுசெய்யும் பொருட்டு, அமெரிக்காவினால் அல்லது அமெரிக்காவிற்காக மட்டுமே எதிர்காலத்தில் அங்கு கட்டணங்கள் விதிக்கப்படலாம். ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் எச்சரித்திருந்த பின்னணியில், அங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சர்வதேச ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
ஹோர்முஸ் நீரிணையில் 60 நாட்களுக்கு கட்டணங்கள் கிடையாது - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
General21 June 2026

லெபனான் போரை நிறுத்த அமெரிக்காவிற்கு அழுத்தம் - ஈரானின் புதிய ராஜதந்திரம்!

லெபனானில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் மீது ஈரான் ‘கடுமையான அழுத்தத்தை’ பிரயோகித்து வருவதாக கட்டார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல்லா பந்தர் அல் எதைபி தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சந்தைகளில் உடனடி பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக டிரம்ப் தனது பதவிக்காலத்தில் வாரயிறுதி நாட்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உத்தியைக் கையாள்வார். தற்போது அதே பாணியிலான வாரயிறுதி உத்தியை ஈரானும் கையாளத் தொடங்கியுள்ளது. சர்வதேச எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை லெபனான் விவகாரத்தோடு ஈரான் இணைத்துப் பார்க்கிறது. லெபனானில் நடக்கும் அனைத்துப் போர்களும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் அப்போதுதான் ஹோர்முஸ் நீரிணையில் வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து சீராக நடைபெற அனுமதிக்கப்படும் என்ற அழுத்தமான கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது.

விபரங்களுக்கு
லெபனான் போரை நிறுத்த அமெரிக்காவிற்கு அழுத்தம் - ஈரானின் புதிய ராஜதந்திரம்!
International News

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்

International 21 June 2026
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்

தங்கம், வெள்ளி விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் உள்ளே!

International 21 June 2026
தங்கம், வெள்ளி விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் உள்ளே!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் கெய்ர் ஸ்டார்மர்?

International 21 June 2026
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் கெய்ர் ஸ்டார்மர்?

ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

International 21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு

International 21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு

ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை

International 21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்

International 21 June 2026
உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்

அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு

International 20 June 2026
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

International 20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!

தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா

International 20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா

ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு

International 20 June 2026
ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு

2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!

International 20 June 2026
2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!

அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!

International 20 June 2026
அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!

நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது

International 20 June 2026
நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது

வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு

International 20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
Sports Stories
Explore More
துனிசியாவை 4-0 என வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றி

துனிசியாவை 4-0 என வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றி

2026 கால்பந்து உலகக் கிண்ண தொடரின் குழு F பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் துனிசிய அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மெக்சிகோவின் குவாதலூபேயில் அமைந்துள்ள மொன்டெர்ரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, உலகக் கிண்ண வரலாற்றின் 1000ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக பதிவாகியுள்ளது.போட்டி ஆரம்பமான 4ஆவது நிமிடத்திலேயே ஜப்பான் அணியின் டைச்சி கமடா (Daichi Kamada) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அயாஸ் உடா (Ayase Ueda) 31ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் ஜப்பான் 2-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த ஜப்பான் அணிக்கு 69ஆவது நிமிடத்தில் ஜூனியா இடோ (Junya Ito) ஒரு கோலை அடித்தார். தொடர்ந்து துனிசிய அணியின் தற்காப்பு அரணை சிதறடித்த அயாஸ் உடா, 83ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். துனிசிய அணியினரால் இறுதிவரை பதில் கோல் எதுவும் அடிக்க முடியாததால், ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து ஜப்பான் அணி குழு மட்டத்தில் பலமான நிலையை அடைந்துள்ளது.

விபரங்களுக்கு
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது

றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது

2026 டயலொக் பாடசாலைகள் ரக்பி லீக் தொடரின் பிரதான கிண்ணப் பிரிவில் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில், கொழும்பு றோயல் கல்லூரியை 27-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியின் வெற்றி மூலம், இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘பி. சி. ஆங்கி’ (B. C. Anghie) நினைவு கிண்ணத்தை சென்.பீட்டர்ஸ் வீரர்கள் மீண்டும் தமதாக்கிக் கொண்டனர்.கடந்த வருடத்தில் இந்த கிண்ணத்தை றோயல் கல்லூரி தன்வசப்படுத்தியிருந்த போதிலும், இம்முறை போட்டியில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக அதனை மீண்டும் பம்பலப்பிட்டிக்குக் கொண்டு செல்ல புனித பீட்டர்ஸ் கல்லூரிக்குக் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

விபரங்களுக்கு
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்

டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை GMR மற்றும் JSW ஆகிய நிறுவனங்கள் மாறி மாறி நிர்வகித்து வருகின்றன. கடந்த இரு வருடங்களாக GMR நிறுவனம் அணியை வழிநடத்திய நிலையில், 2027 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு JSW நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவுள்ளது.இதன்படி, JSW நிறுவனத்தின் கீழ் டெல்லி அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள சௌரவ் கங்குலியின் விருப்பத்திற்கு அமையவே, யுவராஜ் சிங் இந்த பதவியில் அமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்களில் அக்சர் பட்டேல் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி, பிளே-ஓஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது.இந்த ஏமாற்றகரமான செயல்திறன் காரணமாக, தற்போதைய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹேமங் பதானியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையிலேயே, அணியை வலுப்படுத்த யுவராஜ் சிங் உள்வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

விபரங்களுக்கு
தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி

தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி

கால்பந்து தொடரின் குழு A பிரிவுக்கான லீக் போட்டியில், தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது. குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. எனினும், ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் அடித்த பந்தை தென் கொரிய கோல்கீப்பர் கிம் சேங்-கியூ சாதுரியமாக தடுத்தார். அதனை தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி 50ஆவது நிமிடத்தில், தென் கொரிய கோல்கீப்பர் பந்தைக் கட்டுப்படுத்தத் தவறிய சமயம், மெக்சிகோ வீரர் லூயிஸ் ரோமோ (Luis Romo) பந்தை கோலாக மாற்றி தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற்று கொடுத்தார். ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் நட்சத்திர வீரர் சன் ஹியுங்-மின் (Son Heung-min) மாற்றப்பட்டு மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில்தென் கொரியா கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக 87ஆவது நிமிடத்தில் சோ குவே-சுங் (அடித்த ஹெடரை மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரான்கெல் மிக அற்புதமாக தடுத்து இரட்டை சேவ் செய்து மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தார்.

விபரங்களுக்கு
தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!

தங்கப் பாதணி விருது போட்டியில் மன்சாம்பி - சுவிட்சர்லாந்து அணியின் அதிரடி வெற்றி!

உலகக் கிண்ணக் கால் பந்து தொடரின் குழு 'பி' (Group B) பிரிவில், இன்று 10 வீரர்களுடன் விளையாடிய பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து (Switzerland) அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கட்டார், அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியைச் சமநிலையில் முடித்திருந்த சுவிட்சர்லாந்து அணி, இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் ஜோஹான் மன்சாம்பி (Johan Manzambi) காட்டிய அதிரடியால் ஒரு சிறப்பான மற்றும் தகுதியான வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பற்ற முதல் பாதி ஆட்டத்திற்குப் பிறகு, மாற்று வீரராகக் களம் இறங்கிய ஃபிரைபர்க் (Freiburg) நட்சத்திரம் மன்சாம்பி, ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து மற்றொரு மாற்று வீரரான ரூபன் வர்காஸ் (Ruben Vargas) சுவிஸ் அணியின் இரண்டாவது கோலை அடித்ததுடன், மன்சாம்பியின் அடுத்த கோலுக்கும் வழிவகுத்து அவரை தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டியில் முன்னிறுத்தினார். இதற்கிடையில், சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோவை வேண்டுமென்றே வீழ்த்தியதற்காகப் பொஸ்னியா அணியின் தாரிக் முஹாரெமோவிக் சிவப்பு அட்டை (Red card) பெற்று வெளியேறினார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பொஸ்னியாவின் எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தாலும், கடைசி நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் தலைவர் கிரானிட் ஷாகா (Granit Xhaka) பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 4-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தார்.

விபரங்களுக்கு
21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!

21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!

உலகக் கிண்ணக் கால் பந்து தொடரின் குழு 'யு' பிரிவில், அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் செக் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே செக் குடியரசு அணியின் மிச்சல் சாடிலெக் அடித்த கோலை, ஆட்டத்தின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவின் டெபோஹோ மொகோயினா பெனால்டி வாய்ப்பு மூலம் சமன் செய்தார்.   இந்த முடிவையடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன. செக் குடியரசு அணியின் பயிற்சியாளர் மிரோஸ்லாவ் கூபெக் (Miroslav Koubek) எதிர்பார்த்தபடியே அந்த அணி ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியது. ஆட்டத்தின் 5 நிமிடங்கள் 8 வினாடிகளிலேயே மிச்சல் சாடிலெக் மிக அதிவேகமாக முதல் கோலை அடித்து சாதனை படைத்தார் (இதற்குமுன் குராசோ அணிக்கு எதிராக ஜெர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா 5 நிமிடம் 16 வினாடிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது). ஆடம் ஹலோசெக் மற்றும் அலெக்சாண்டர் சோஜ்கா ஆகியோரின் சாதுரியமான ஆட்டத்தால் இந்த கோல் சாத்தியமானது. பிற்பாதியில் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ் ((Hugo Broos), 21 வயதான இளம் வீரர் ரெலெபோஹைல் மொஃபோகெங்கை களம் இறக்கினார். அவரது திறமையான ஆட்டத்திற்கு மத்தியிலும், செக் குடியரசின் லாடிஸ்லாவ் கிரெய்ச்சி தலைமையிலான பலமான தடுப்பாட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்தது. எனினும், செக் குடியரசு வீரர் பாவெல் சுல்க் கையில் பந்து பட்டதால் (Handbal) தென்னாப்பிரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திய மொகோயினா, பந்தை கோலாக மாற்றி ஆட்டத்தைச் சமன் செய்தார். தங்கள் அணியின் ஆட்டம் குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ், "என் அணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நாங்கள் சிறந்த, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். செக் குடியரசு அணி மிகவும் வலிமையானது, இருந்தும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். இந்த ஆட்டம் 1-1 என சமநிலையானது சற்று வருத்தமளித்தாலும், அடுத்ததாக கொரிய குடியரசுக்கு எதிரான கடினமான போட்டியில் இதே மனநிலையுடன் விளையாடி வெற்றி பெற முயல்வோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது புகைப்படங்கள் (Photos) மற்றும் காணொளிகளை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் அனுப்பப்படும் 'View-once' வசதியைப் போலவே, இனி சாதாரண குறுந்தகவல்களையும் (Text Messages) ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் அனுப்பும் புதிய முறையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பேணவும், முக்கியமான தகவல்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காகவுமே இந்த 'View-once text' முறை கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு வசதியானது, தற்போது முதற்கட்டமாக ஒரு சில ஐபோன் (iPhone) பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் (Beta Version) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியாவின் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேரையும் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2024 டிசம்பர் 4 அன்று ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காகக் கூடிய ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்ததுடன், அவரது 8 வயது மகனும் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை கடந்த டிசம்பர் 24 அன்று 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குறித்த சம்பவம் தொடர்பாக 2024 டிசம்பர் 13 அன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், படக்குழுவினர் மற்றும் தெலங்கானா அரசாங்கம் நிதியுதவி வழங்கியிருந்தது. இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அல்லு அர்ஜுனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

புகழ்பெற்ற ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'The Odyssey' திரைப்படம், இந்தியாவில் சிறப்பு காட்சி (Premiere) காணும் முதல் நோலன் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளது. உலகளாவிய விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை மாதம் இயக்குனர் நோலன், அவரது தயாரிப்பாளரான மனைவி எம்மா தோமஸ் மற்றும் ஹொலிவுட் நட்சத்திரங்களான மேட் டாமன், டாம் ஹாலாண்ட் ஆகியோர் மும்பை நகருக்கு வருகை தரவுள்ளனர். யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய சர்வதேச நகரங்களுடன் இணைந்து மும்பையையும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய சிறப்பு நகரமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹோமரின் உன்னத காவியமான, டிராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டுகாலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிஸியஸாக மேட் டாமனும், அவரது மகன் டெலிமகாஸாக டாம் ஹோலாண்டும் நடித்துள்ளனர். முற்றிலும் புதிய ஐமாக்ஸ் (IMAX) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகளவில் முழுமையாக ஐமாக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையை 'The Odyssey' பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் சிறப்பு காட்சி மும்பையிலுள்ள 'PVR Icon IMAX: Phoenix Palladium' திரையரங்கில் நடைபெறவுள்ளது. சின்கோபி (Syncopy) நிறுவனத்திற்காக நோலன் மற்றும் எம்மா தயாரித்துள்ள இந்த படத்தில், மேட் டாமன் மற்றும் டாம் ஹாலாண்டுடன் இணைந்து ஆன் ஹாத்வே, ரொபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சர் விஜய்யை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை சிம்ரன்!

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற சூப்பர் ஹிட் ஜோடிகளுள் ஒருவரான விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோரின் இந்த திடீர் சந்திப்பு தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சிம்ரன், தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இச்சந்திப்பின் போது நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகா மற்றும் அவர்களது மகன்கள் உடனிருந்தனர். முன்னாள் சக நடிகை என்ற ரீதியிலும், நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையிலும் இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யுடன், நடிகை சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த பிரத்தியேகப் புகைப்படம் தற்பொழுது இணையத்திலும், சினிமா ரசிகர்களிடையேயும் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!

பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) சிற்றூந்து பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பிரான்சில் உள்ள புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' (Circuit des 24 Heures du Mans) ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச அளவிலான கடுமையான சிற்றூந்து பந்தயத்தில், அஜித் குமாரின் அணி பங்கேற்று கவனம் ஈர்த்தது. குறிப்பாக, லெ மான்ஸ் பந்தய வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்ற இந்திய அணியாக 'அஜித் குமார் ரேசிங்' அணி இடம்பிடித்துள்ளது. மொத்தம் 62 சிற்றூந்துகள் பங்கேற்ற இந்த சவாலான போட்டியில், அஜித் அணியின் இரண்டு வாகனங்களும் சிறப்பான நிலைகளைப் பெற்றுள்ளன. அதன்படி, சிற்றூந்து எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தை பெற்றது. சிற்றூந்து எண் 36 ஒட்டுமொத்த தரவரிசையில் 13-வது இடத்தை பிடித்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து, அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித், குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் விஜய் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதைப் பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித் குமாரின் இந்த சாதனை இந்திய மோட்டார் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

விபரங்களுக்கு
'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

'AK 64' படத்திற்காக ரூ.187 கோடி வேதனம்? : அஜித்தின் அதிரடி கண்டிஷன்!

தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமான அஜித் குமாரின் 64-ஆவது திரைப்படமான 'AK 64' குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு பிரம்மாண்ட தொகை வேதனமாக பேசப்பட்டு வருவதாக கொலிவூட் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக சில முன்னணி கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும், புதிய தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்குமாருக்கு 187 கோடி ரூபாய் வேதனமாக வழங்குவதற்கு தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தமிழ் சினிமாவின் மிக உயர்ந்த வேதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தொகை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது, நடிகர் அஜித் தரப்பிலிருந்து மிகவும் கடுமையான நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனக்கு வழங்கப்படும் முழு வேதனத்தையும் தனது அதிகாரபூர்வ வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும் என அஜித் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான கண்டிஷன் தற்போது சினிமா தரப்புக்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. "விடாமுயற்சி" மற்றும் "குட் பேட் அக்லி" ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

த்ரிஷாவின் கழுத்தில் ‘மின்னு’ தாலி? : ரகசிய திருமணமா என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து, நடிகை த்ரிஷா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் நடைபெற்றிருந்தால், அவரது வாழ்க்கைத் துணை யார் என்பது குறித்தும் பல்வேறு ஊகங்கள் மற்றும் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், மற்றொரு தரப்பினர் இது த்ரிஷா தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் அல்லது தொடர் ஒன்றுக்கான கதாபாத்திர தோற்றமாக இருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் த்ரிஷா அல்லது அவரது நிர்வாகக் குழுவினரிடமிருந்து எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தற்போது ஊகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதுடன், த்ரிஷாவின் தரப்பிலிருந்து விளக்கம் வெளியாகும் வரை இந்த விவகாரத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் கொலிவூட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, பிரபல மூத்த நடிகர் பிரபு இன்று (08) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடிகர் பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது மருமகனும் உடனிருந்தனர். அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்யை, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபு, தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இச்சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் தரப்புகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////