International21 June 2026

ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

ஹோர்முஸ் நீரிணை முடப்பட்டதாக கூறப்பட்ட ஈரானின் இந்த அறிவிப்பையும் மீறி ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இன்று அதிகரித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

எனினும், இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் சர்வதேச கடல்வழிப் பாதையூடான பாதுகாப்பான போக்குவரத்து இன்று எவ்விதப் பாதிப்புமின்றித் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று ஒரே நாளில் 55 வணிகக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.

இதன் மூலம் பெருமளவிலான சரக்குகளும், 17 மில்லியனுக்கும் அதிகமான மசகு எண்ணெய் பீப்பாய்களும் உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அமெரிக்கப் படைகள் அந்தப் பகுதியில் "தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes