Sports19 June 2026

21 வயது இளம் புயல் மொஃபோகெங்கின் மந்திர ஆட்டம்: உலகக் கவனத்தை ஈர்த்த இளம் வீரர்!

உலகக் கிண்ணக் கால் பந்து தொடரின் குழு 'யு' பிரிவில், அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் செக் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே செக் குடியரசு அணியின் மிச்சல் சாடிலெக் அடித்த கோலை, ஆட்டத்தின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவின் டெபோஹோ மொகோயினா பெனால்டி வாய்ப்பு மூலம் சமன் செய்தார்.
 
இந்த முடிவையடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

செக் குடியரசு அணியின் பயிற்சியாளர் மிரோஸ்லாவ் கூபெக் (Miroslav Koubek) எதிர்பார்த்தபடியே அந்த அணி ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியது.

ஆட்டத்தின் 5 நிமிடங்கள் 8 வினாடிகளிலேயே மிச்சல் சாடிலெக் மிக அதிவேகமாக முதல் கோலை அடித்து சாதனை படைத்தார் (இதற்குமுன் குராசோ அணிக்கு எதிராக ஜெர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா 5 நிமிடம் 16 வினாடிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது).

ஆடம் ஹலோசெக் மற்றும் அலெக்சாண்டர் சோஜ்கா ஆகியோரின் சாதுரியமான ஆட்டத்தால் இந்த கோல் சாத்தியமானது
.
பிற்பாதியில் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ் ((Hugo Broos), 21 வயதான இளம் வீரர் ரெலெபோஹைல் மொஃபோகெங்கை களம் இறக்கினார்.

அவரது திறமையான ஆட்டத்திற்கு மத்தியிலும், செக் குடியரசின் லாடிஸ்லாவ் கிரெய்ச்சி தலைமையிலான பலமான தடுப்பாட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்தது.

எனினும், செக் குடியரசு வீரர் பாவெல் சுல்க் கையில் பந்து பட்டதால் (Handbal) தென்னாப்பிரிக்காவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாகப் பயன்படுத்திய மொகோயினா, பந்தை கோலாக மாற்றி ஆட்டத்தைச் சமன் செய்தார்.

தங்கள் அணியின் ஆட்டம் குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ், "என் அணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் சிறந்த, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

செக் குடியரசு அணி மிகவும் வலிமையானது, இருந்தும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்.

இந்த ஆட்டம் 1-1 என சமநிலையானது சற்று வருத்தமளித்தாலும், அடுத்ததாக கொரிய குடியரசுக்கு எதிரான கடினமான போட்டியில் இதே மனநிலையுடன் விளையாடி வெற்றி பெற முயல்வோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes