International21 June 2026

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானின் உயர்மட்டக் குழுவொன்று சனிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள இந்த அமைதிக்கூட்டத்திற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் விரைவில் புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஊடக தகவல்களின்படி, நாட்டின் உயர்மட்டக் குழுவிற்கு ஈரானின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாப் தலைமை தாங்குகிறார்.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையே கடந்த புதன்கிழமை, கிட்டத்தட்ட நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஓர் இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அதிரடியாக அறிவித்தது.

இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் தனது அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes