அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் (Qantas Airways) நிறுவனம், சிட்னியிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் உலகின் மிக நீண்ட நேரடி வானூர்தி சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
சுமார் 20 முதல் 22 மணிநேரங்கள் வரை நீடிக்கும் இந்த அதிநீண்ட பயணத்தினால் பயணிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான சோர்வையும், தூக்கக் குறைபாட்டையும் போக்க, அறிவியல் பூர்வமான புதிய உத்திகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி பயணிகள் எழுந்து நடமாடுவதற்கும், உடலைத் தளர்த்துவதற்கும் ஏதுவாக பிரத்யேக 'Wellness Zone' உருவாக்கப்பட்டுள்ளது.
இது குளிர்ந்த நீச்சல் குளத்தின் அருகே இருப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் ஒளியமைப்பைக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இயற்கை எழிலை பிரதிபலிக்கும் வகையில் 14 விதமான ஒளியமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை வானூர்திக்குள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை செயற்கையாக உருவாக்கி, பயணிகளின் உடற்கடிகாரத்தை (Body Clock) புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப மாற்ற உதவும்.
வானூர்தி புறப்பட்ட உடனேயே உணவு வழங்குவதைத் தவிர்த்து, அறிவியல் முறைப்படி நேரத்தைக் கணித்து உணவு வழங்குவதன் மூலம் பயணிகளின் விழிப்புணர்வுத் திறன் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Economy வகுப்பில் இருக்கைகளுக்கு இடையேயான இடைவெளி 33 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் கட்டணத்தில் 'Economy Plus' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எடைக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வானூர்தியில் 238 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
ஒரு நிறுத்தத்தைக் தவிர்த்து நேரடியாகச் செல்வதால், மற்ற வானூர்திகளை விட 20% கூடுதல் கட்டணத்தைப் பயணிகளிடம் இருந்து வசூலிக்க குவாண்டாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நேரத்தை சேமிக்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் உயரமான பயணிகள் இந்த வசதியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், கூடுதல் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
Latest News
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை!
Local
21 June 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9A சித்தி!
Local
21 June 2026
சமூக ஊடகங்கள் வழியே பெண்களுக்கு வலைவீசும் கும்பல்: காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
21 June 2026
தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
Local
21 June 2026
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
Local
21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
Local
21 June 2026
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
Local
21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு
Local
21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை
Local
21 June 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
21 June 2026