மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐநா அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை வான்படைப் பிரிவினர், கொடூரமான துப்பாக்கிச் சமர் மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் 14 பேரின் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.
'அம் டெஃபொக்' பகுதியில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சாம்பியப் படையினர் மற்றும் பொதுமக்களை மீட்கும் பொறுப்பை, பாகிஸ்தான் படையினரின் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இலங்கை வான்படை ஏற்றுக்கொண்டது.
குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே தலைமையிலான குழுவினர், Mi-17 உலங்குவானூர்திகள் மூலம் ஆபத்தான போர்க்களத்துக்குள் நுழைந்து, இயந்திரத்தை இயங்கிய நிலையிலேயே வைத்து மிகக் குறுகிய நேரத்தில் 14 பேரையும் மீட்டுள்ளனர்.
ஐநா வரலாற்றிலேயே அவசர மீட்புப் பணியின் போது ஒரே நேரத்தில் 14 பேர் மீட்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வான்படையினரின் இந்த அசாத்திய துணிச்சலை ஐநா அமைதிப்படையின் முதன்மை கட்டளை அதிகாரி உயரிய முறையில் பாராட்டியுள்ளதுடன், இது சர்வதேச அரங்கில் இலங்கை ஆயுதப்படைகளின் நன்மதிப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதாக இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.

Latest News
அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் வெடிக்குமா? – ஜே.டி. வான்ஸ் முக்கிய கருத்து!
Local
02 July 2026
மட்டக்குளிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Local
02 July 2026
இன்றைய வானிலை குறித்த முன்னறிவிப்பு!
Local
02 July 2026
களுத்துறையில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் பலி - இருவர் படுகாயம்!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு!
Local
02 July 2026
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு!
Local
02 July 2026
நெஞ்சை பதறவைத்த கூடுதல் நேரம்: செனகலை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி!
Local
02 July 2026
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
Local
02 July 2026
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026