General13 July 2026

உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!

நமது நாட்டின் அரிசி உற்பத்தி வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகளவிலான விளைச்சல் கிடைத்து அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" அதிக விளைச்சல் கிடைத்துள்ளது , அப்படியானால் அவற்றை வெவ்வேறு துறைகளில் பயன்படுத்துவது தான் சிறந்த வழியாகும் .

அதை விடுத்து பியர் தயாரிப்பதா ? அல்லது வேறு ஏதாவது தயாரிப்பதா ? என கேள்வி எழுப்பாது அவை வீணாகிப் போகாமல் நுகர்வுக்குத் தேவையான விடயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.

அதுவும் ஒரு தொழில்துறைதான். அந்தத் தொழில்துறைக்கு அதைப்பயன்படுத்திக் கொள்ள முடியுமானால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை."
Related recommendation
Hiru TV News | Programmes