ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, ஆர்ஜென்டினா வீரர்கள் , ஃபாக்லாந்து தீவுகள் ஆர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை என்ற பதாகையைக் காட்டியதற்கு பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர் பீட்டர் கைல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மைதானத்திற்குள் அரசியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கால்பந்து சம்மேளனத்தின் விதிகளை இந்தச் செயல் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கைல், இது குறித்து உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், "கால்பந்து செம்பியன்ஷிப் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபாக்லாந்து தீவுகள் நிச்சயமாக நமக்குத்தான் சொந்தம்" என்று டவுனிங் ஸ்ட்ரீட் பேச்சாளர் ஒருவர் ஆர்ஜென்டினாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, இரண்டு நாடுகளுக்கும் இடையே மற்றொரு தூதரக மோதலும் வெடித்துள்ளது.
இதில் ஒரு சம்பவமாக, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் வகையில் செயற்பட்ட பிரிட்டன் கப்பலுக்கு எதிராக, பியூனஸ் அயர்ஸில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் ,ஆர்ஜென்டினா அரசாங்கம், முறைப்படி தனது தூதரக எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1982-இல் நடந்த போரின் வடுக்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் என்பன, 2026 கால்பந்து செம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியை, வெறும் கால்பந்து போட்டியாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளன.
Latest News
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு!
Local
17 July 2026
2020 அமெரிக்கத் தேர்தல்: அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளைச் சீனா கைப்பற்றியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
17 July 2026
அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
17 July 2026
ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல் ராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
Local
17 July 2026
யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்
Local
17 July 2026
வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்
Local
17 July 2026
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி
Local
17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை
Local
17 July 2026
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி
Local
17 July 2026
கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
17 July 2026