இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

Latest News
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Local
23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!
Local
23 July 2026