General23 July 2026

கண்டியின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு!

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டி – திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை இன்று (23) காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், நாளை மறுதினம் 25ஆம் திகதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக வைத்துக்கொள்ளுமாறும், தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes