இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் சூழலியலாளருமான நயனக ரன்வெல்ல கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட ‘மஹசென்’ மற்றும் மிகப்பெரிய நெற்றிப் பகுதியை கொண்ட ‘செண்டோ’ உள்ளிட்ட பல முக்கிய யானைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தரவுகளின்படி, நாட்டில் ஆண்டுக்கு சுமார் 450 யானைகள் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளதுடன், பதிவாகாமல் காடுகளுக்குள் மேலும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு வருடத்துக்கு மொத்தம் 22 யானைகள் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய இறப்பு வீதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யானைகள் என்பது காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணும் பிரதான உயிரினமாகும். எனவே யானைகள் அழியும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றாடல் சமநிலையும் முற்றாகச் சீர்குலையும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஒரு யானை தனது வாழ்நாளில் இலங்கைக்குக் குறைந்தபட்சம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யானைகள் தொடர்ந்து இதே வேகத்தில் உயிரிழந்து வந்தால், எதிர்காலத்தில் அருங்காட்சியகங்களில் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளாக மட்டுமே யானைகளைப் பார்க்க நேரிடும் என்றும் சூழலியலாளர் நயனக ரன்வெல்ல மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest News
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026