அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், அது நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்கும் என அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அவ்வாறு அரசு முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Latest News
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க - இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
Local
31 August 2026