நாட்டில் நிலவிய கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

Latest News
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026
பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு: 38 பேரின் எச்சங்கள் மீட்பு!‘
Local
10 September 2026
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயுதக் கிடங்கு வெடிப்பு: 14 பேர் பலி
Local
10 September 2026
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்
Local
10 September 2026