முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான கையூட்டல் ஊழல் வழக்கில் தண்டனையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 750,000 கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்வைத்த விபரங்களைக் கருத்தில் கொண்டு இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீ.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வழக்கைப் பற்றி பேச முயன்றுள்ளார்.
வழக்குகளைப் பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன்,அவருடன் உரையாட மறுத்துள்ளார்.
இதனை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும், தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் (Book Binder) ஒருவர் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராக இருந்தபோது வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Latest News
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026
"குழந்தை பிறந்தால் வாழ்க்கையே மாறிவிடும்" – தாய்மை குறித்து சமந்தா!
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
Local
10 September 2026
ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!
Local
10 September 2026