இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வதைச் செயல்களுக்கு நீதி வழங்குவதில் அர்த்தபூர்வமான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை என கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது அம்சத்தின் கீழ், கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் ஹரிணி சிவலிங்கம் முன்வைத்த வாய்மூல அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழித் தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் குழந்தைகள் உட்பட 583 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது நம்பகமான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சுயாதீன தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமையும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.
மினசோட்டா நெறிமுறை உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைய, சுயாதீன சர்வதேச தடயவியல் பார்வையாளர்களின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டோர் மையப்படுத்தப்பட்ட அகழாய்வு செயற்பாட்டை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையைக் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அகழாய்வுகளை கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் பேரவையின் ஏனைய தீர்மானங்கள் இருந்தபோதிலும், நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பேரவையும், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறல் திட்டத்துடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும், உள்நாட்டு, வெளிநாட்டு அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் எதிர்காலச் குற்றவியல் நடவடிக்கைகளுக்காகச் சாட்சிகளைச் சேகரித்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Latest News
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026
"குழந்தை பிறந்தால் வாழ்க்கையே மாறிவிடும்" – தாய்மை குறித்து சமந்தா!
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
Local
10 September 2026
ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!
Local
10 September 2026