கால்பந்து செம்பியன்ஸ் தொடரின் 32 ஆவது சுற்றின், 83 ஆவது போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியின் 45 ஆவது நிமிடம் அமெரிக்க அணியின் ஃபொலாரின் பாலோகுன் (Folarin Balogun) முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 64 ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த பாலோகுன் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் அமெரிக்க அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இருப்பினும், ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் மூலம் அணியின் இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்ட நேர முடிவில் பொஸ்னியா அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாமல் போனதால் அமெரிக்கா 2-0 என வெற்றி பெற்றது.
Latest News
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Local
03 July 2026
அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
Local
03 July 2026
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி
Local
03 July 2026
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி
Local
03 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரின் இறுதி நாள் இன்று
Local
03 July 2026
நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிக அபாயத்தில்!
Local
03 July 2026
16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிக்கு போர்த்துக்கல் அணி தெரிவு
Local
03 July 2026