சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பணப் பறிப்பு, சொத்துக் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு விசேட விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி மோசடி நபர்கள் திருமணம் செய்து கொள்வதாக போலியான வாக்குறுதிகளை வழங்கி பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.
உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து, பெண்களை நினைவு இழக்கச் செய்து பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதும், அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளது.
போலியான காதலர்களாக நடித்து பெண்களின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் பணம் மற்றும் சொத்துக்களைப் பறித்துக் கொண்டு இறுதியாகக் கொலையில் முடிந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை குறித்து காவல்துறை தீவிர கவனம் செலுத்தியுள்ளதுடன், ஆபத்துக்குள்ளாகக்கூடிய நபர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுமாறு அனைத்துக் காவல்துறை நிலையங்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள், புலனாய்வு மற்றும் சிவில் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இணையம் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணம், நகைகள் அல்லது மதிப்புமிக்க சொத்துக்களை வழங்க வேண்டாம் என பெண்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உங்களது அந்தரங்கமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுப்ப வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி கணக்கு இலக்கம், முகவரி போன்ற ரகசியத் தகவல்களை அந்நியர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கு அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 118 / 119 / 107 / 109 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்கள் மூலமும் காவல்துறையினரைத் தொடர்புகொள்ள முடியும்.
Latest News
நீதியரசர்கள் வெற்றிடப் பிரச்சினை: அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயார்
Local
21 June 2026
வீட்டுப் பணியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு: சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
Local
21 June 2026
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை!
Local
21 June 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9A சித்தி!
Local
21 June 2026
சமூக ஊடகங்கள் வழியே பெண்களுக்கு வலைவீசும் கும்பல்: காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
21 June 2026
தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
Local
21 June 2026
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
Local
21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
Local
21 June 2026
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
Local
21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு
Local
21 June 2026