பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக UNICEF வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
உலகளவில் சுமார் 1.8 பில்லியன் குழந்தைகள் வறட்சியினாலும், 1.2 பில்லியன் குழந்தைகள் கடுமையான வெப்ப அலையினாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
662 மில்லியன் குழந்தைகள் வெப்பமண்டல புயல்களாலும், 337 மில்லியன் குழந்தைகள் ஆற்று வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் மட்டும் 1 பில்லியன் குழந்தைகள் மலேரியா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், பருவநிலை விபரீதங்களால் 85 நாடுகளில் 242 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உலகளாவிய வானிலையை மாற்றி அமைக்கும் 'சுப்பர் எல் நினோ' தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் உணவு உற்பத்தியை அச்சுறுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், கடந்த ஆண்டுகளில் உலகளவில் அரிசி மற்றும் இதர தானியங்கள் சாதனை அளவில் அறுவடை செய்யப்பட்டு சேமிப்பில் உள்ளதால், உணவுப் பற்றாக்குறை ஆபத்து சற்றுக் குறைந்துள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
Latest News
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை!
Local
21 June 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9A சித்தி!
Local
21 June 2026
சமூக ஊடகங்கள் வழியே பெண்களுக்கு வலைவீசும் கும்பல்: காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
21 June 2026
தரம் குறைந்த 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணப் தொகுதிகள் நீக்கம்
Local
21 June 2026
பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!
Local
21 June 2026
ஈரானின் அறிக்கையை மறுத்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
Local
21 June 2026
22 மணிநேர நேரடி வானூர்திப் பயணம் - வானூர்திக்குள்ளேயே சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்!
Local
21 June 2026
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்து புறப்பட்டது ஈரானிய உயர்மட்டக் குழு
Local
21 June 2026
ஐரோப்பாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: பிரான்சில் அவசரக் கூட்டம், ஜெர்மனிக்கு எச்சரிக்கை
Local
21 June 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
21 June 2026