General21 June 2026

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

இந்த அதிகாரிகள் குழுவின் பயணம் ஜூன் மாதம் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் ஈவன் பெபஜோர்ஜியு (Evan Papageorgiou) உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த பயணத்தில் இணையவுள்ளனர்.

இலங்கை தற்போது நடைமுறைப்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வதே இந்த பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes