General04 July 2026

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை

சவூதி அரேபியாவின் நிதி உதவியுடன் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ பீட வளாகம் இன்று (04) உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனைத் திறந்துவைக்கவுள்ளார்.

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் நவீன மருத்துவ பீட வளாகம், மாணவர் விடுதிகள், நூலகம், 1,000 ஆசனங்களைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் பேராசிரியர்கள் பிரிவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது இலங்கையில் நிறுவப்பட்டுள்ள 10ஆவது மருத்துவ பீடமாகும். இதன் மூலம் உள்நாட்டில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் விரிவடைவதுடன், நாட்டில் நிலவும் சுகாதாரத் துறைசார் நிபுணர்களின் வெற்றிடங்களையும் நிரப்ப முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes