இலங்கையில் வரி வசூலை முறைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய வரி நிர்வாக மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள், போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலில் பொதுமக்களுக்குப் பெரும் பொருளாதார மற்றும் மன ரீதியான சுமையாக மாற்றமடைந்துள்ளதாக வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் AGS. சுவாமி நாதன் சர்மா தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) முறைமை கட்டாயமாக்கப்பட்டு தொலைபேசி எண்களுடன் இணைக்கப்படுவதுடன், KYC நடைமுறைகளும் உள்ளீர்க்கப்படுவதால் தனிநபர்களின் நிதி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்குள் வருகின்றன. இது பொதுமக்களிடையே "டிஜிட்டல் அழுத்தத்தை" தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கூகுள், பேஸ்புக், யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கான வரி விதிப்பால் பயனர்களின் செலவுகள் அதிகரிக்கவுள்ளன.
அத்துடன், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் மீது 20.5% வரி விதிக்கப்படுவதால் பரிவர்த்தனைகள் செலவுமிக்கதாக மாறுவதுடன், VAT மற்றும் மூலதன ஆதாய வரி போன்றன நடுத்தர வர்க்கத்தினரையும் முதியவர்களையும் நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய டிஜிட்டல் வரி முறைகளைக் கையாள்வதில் வங்கித் துறையினரின் போதிய பயிற்சியின்மை காரணமாக பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வரி மாற்றங்கள் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளின் விலைகளும் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச அளவில் குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி!
Local
04 July 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
Local
04 July 2026
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
Local
04 July 2026
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
Local
04 July 2026
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
Local
04 July 2026
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
Local
04 July 2026
காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!
Local
04 July 2026
புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை
Local
04 July 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஐநா கோரிக்கை!
Local
04 July 2026