General07 July 2026

போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான Round of 16 சுற்று ஆட்டத்தில், போர்த்துகல் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

ஸ்பெயின் அணி பந்தைத் தன் வசம் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும், போர்த்துகல் அணியின் பலமான தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை.

இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டம் மேலதிக நேரத்தை (Extra Time) நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 90ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மைக்கேல் மெரினோ (Mikel Merino) அதிரடியாக ஒரு கோலை அடித்து போர்த்துகல் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த கோல் VAR பரிசோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், இந்த உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை தனக்கு எதிராக எதிரணிகளை ஒரு கோல் கூட அடிக்க விடாத தனது பலமான தற்காப்பு சாதனையையும் ஸ்பெயின் தக்கவைத்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் 41 வயதான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் போர்த்துகல் அணியின் 2026 உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes