General07 July 2026

கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது, சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் அவசர மருத்துவ சிகிச்சைகளை பெற்றுள்ளதாக அந்தநாட்டு அவசரக்கால சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இந்த மாபெரும் இறுதி ஊர்வல நிகழ்வில், இதுவரை 48,804 பேருக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் ISNA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவசர சிகிச்சை வழங்கப்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்ட 3 பேருக்கு வெற்றிகரமாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 18,000 பேருக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த இறுதி ஊர்வல நிகழ்வுகளில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான அசம்பாவிதங்களோ பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes