அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், 'ட்ரம்ப் கணக்குகள்' (Trump Accounts) என்ற புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான கணக்குகளில் தலா 1,000 டொலர்களை அரசாங்கம் வைப்பு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து நியூயோர்க் பங்குச்சந்தை மற்றும் நாஸ்டாக் (Nasdaq) ஆகியவற்றின் தலைவர்களுடன் இணைந்து ட்ரம்ப் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
2025ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை பிறக்கும் அமெரிக்க குழந்தைகளுக்கு நீண்ட கால முதலீடு மற்றும் நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்ததிட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது, நீண்ட கால வளர்ச்சியை இலக்காகக் கொண்ட குறைந்த கட்டண இண்டெக்ஸ் ஃபண்டுகளில் (Index Funds) தானாகவே முதலீடு செய்யப்படும்.
இந்த கணக்குகளைக் கொண்ட குழந்தைகள் 18 வயதை எட்டும்போது, அவர்கள் இந்த நிதியை திரும்பப் பெறலாம் அல்லது தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
அத்துடன், பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களும் இந்த திட்டத்திற்கு தங்களது கூடுதல் நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள குடியரசுக் கட்சி செனட்டர் டெட் க்ரூஸ், இதன் மூலம் அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தையும் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட உரிமையாளர்களாக மாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!
Local
07 July 2026
கமேனியின் இறுதி ஊர்வலம்: சுமார் 50,000 பேருக்கு மருத்துவ சிகிச்சை!
Local
07 July 2026
டெங்கு நோய் குறித்து வெளியான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் மிகுந்த அவதானம்
Local
07 July 2026
T20 ப்ளாஸ்ட் தொடரில் இணையும் இலங்கை வீரர் !
Local
07 July 2026
இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ? அதிகாரிகள் எச்சரிக்கை
Local
07 July 2026
போர்த்துகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்!
Local
07 July 2026
காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!
Local
07 July 2026
டி20 போட்டிகளால் கிரிக்கெட் சீரழிந்துவிட்டது - அர்ஜுன ரணதுங்க காட்டம்!
Local
07 July 2026
குப்பை கொட்டினால் கடும் தண்டனை - வெளியான அதிரடி எச்சரிக்கை!
Local
07 July 2026
கியோம் நகரை வந்தடைந்தது கமேனியின் உடலம்!
Local
07 July 2026