நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 6 முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய, பூச்சியியல் அதிகாரிகளுக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், களப்பணிகளை திறம்பட முன்னெடுக்க அவர்களுக்கு தேவையான சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2007 ஆம் ஆண்டின் நுளம்பினால் பரவும் நோய்த்தடுப்புச் சட்டத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அதேநேரம், டெங்கு ஒழிப்புப் பணிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி, அறிவியல் அடிப்படையில் சுயாதீனமாக செயற்பட அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம், குருநாகல், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால், சமய விழாக்களை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
டெங்கு ஒழிப்பிற்குத் தேவையான சர்வதேச தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெற எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.
பூச்சியியல் துறையில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Latest News
இணையவழி கையடக்கத் தொலைபேசி வியாபார மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை
Local
04 July 2026
லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ட்ரோன் நிகழ்ச்சி
Local
04 July 2026
இதயங்களை நெகிழ வைத்த பாசச்சிறுமி ஸ்வேதா
Local
04 July 2026
நிதிச் சேவை வரி மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்?
Local
04 July 2026
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச அளவில் குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி!
Local
04 July 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
Local
04 July 2026
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
Local
04 July 2026
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
Local
04 July 2026
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
Local
04 July 2026
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
Local
04 July 2026