General11 July 2026

ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இறுதிப் போட்டி, இன்று (11) நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த டி20 தொடரில், இரு அணிகளும் சமபலத்துடன் களமிறங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழையினால் கைவியடப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,

இந்தநிலையில் ஐந்தாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

அதிலும் துடுப்பாட்ட வரிசையிலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இங்கிலாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்குப் பலத்த சவாலை அளித்து வருகிறது.

எனினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes