General11 July 2026

காற்பந்து செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மைதானத்தின் சிறு துண்டை வாங்க அரிய வாய்ப்பு!

காற்பந்து செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தின் ஒரு துண்டை நினைவுப் பரிசாக வைத்துக்கொள்ளும் அரிய வாய்ப்பை காற்பந்து ரசிகர்களுக்கு சர்வதேச காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

இந்த விசேட சேகரிப்புப் பொருளின் விலை 450 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் புல்வெளியின் ஒரு சிறு பகுதி இதில் அடங்கியிருக்கும்.

இது ஒரு பிரீமியம் அக்ரிலிக் டிஸ்ப்ளே பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் USB வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த USBக்கும் அந்தத் துண்டு, மைதானத்தின் உண்மையான பகுதி என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இது பிரீமியம் தரத்திலான பெட்டியில் வழங்கப்படுகிறது.

இறுதிப் போட்டி முடிந்த பின்னரே இந்த நினைவுப் பரிசு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இதனை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேகரிப்புப் பெட்டியானது 17.5 செ.மீ × 17.5 செ.மீ × 17.5 செ.மீ அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காற்பந்து விளையாட்டின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த ஒரு தருணத்தை, தமக்கென ஒரு நினைவுப் பொருளாக வைத்திருக்க விரும்பும் சேகரிப்பாளர்களுக்காகவே இந்தத் தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes