Entertainment11 July 2026

ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவா? நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் சம்பாதிக்கும் தொகை!

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளைஞர்களை பெரிதும் கவர்ந்த முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

குறிப்பாக அவரது நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் அவர் அறிமுகமாக உள்ளதால், அவரது சினிமா வாழ்க்கை இன்னும் உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஸ்ரீலீலாவுக்கு சுமார் 17 மில்லியன் (16.6 மில்லியன்) ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு விளம்பரப் பதிவுகளுக்கும் தலா 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் விளம்பர நிறுவனங்கள் வழங்கும் அனுரனை மூலமாக மட்டுமே அவர் மாதம் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அவர் வருடம்தோறும் மிகப்பெரிய தொகையைச் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes